Tuesday, October 19, 2010

கோவில்களால் நிம்மதி இழந்து தவிக்கும் மனிதர்கள்!


மனித சமூகத்திற்கு கோவில் என்பது தேவையற்ற ஒன்று. அது மட்டுமின்றி அறவே ஒழிக்கப்பட வேண்டிய ஒரு தீங்குமாகும். தமிழ் நாட்டுக் கோவில்களில் நேற்று மட்டும் நடைபெற்ற நிகழ்ச்சி களைக் கீழே படியுங்கள். பக்தரின் சங்கிலி பறிப்பு, அம்மனின் நகை பறிப்பு,கோவில் விழாவில் கல்வீச்சு, குழு மோதல், வழக்கு, அடிதடி என ஊர் மக்கள் ‘ரெண்டு பட்டு’ நிற் கின்றனர். இதுதேவை தானா? நல்ல ஆரோக்கியமான சமூகத்திற்கு நேர்மையான மனிதர்கள் மட்டு மே போதுமானது. கடவுள்கள் மற்றும் இத்யாதி சங்கதிகள் எதுவும் தேவையில்லை. இதோ கோவில் களால் ஏற்பட்ட கொடூரங்களை வாசியுங்கள்!
ஈரோடு மாவட்டம், ஈரோடு - சத்தி முதன்மைச் சாலையில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கோபால் என்பவர் பூசாரியாக உள்ளார். நிகழ்வன்று கோபால் வெளியே சென்றிருந்தார். அவரது மனைவி பத்மாவதி கோவிலில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், அம்மனுக்குப் பூமாலை அணிவிக்க வேண்டும், பூசாரி எங்கே? என பத்மாவதியிடம் கேட்டார். பூசாரி வெளியே சென்றிருக்கிறார் எனக் கூறிய பத்மாவதி அந்த நபரிடம் இருந்து பூமாலையை வாங்கி அம்மனுக்கு அணிவித்து, பூஜை செய்து கொண்டிருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திய அந்த நபர் கருவறைக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையைத் திருடிக் கொண்டு ஓட முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பத்மா வதி, அந்தத் திருடனை விரட்டிச் சென்று பிடித்தார். அவன் கையில் இருந்த நகையை வாங்கக் கடுமை யாகப் போராடினார். இரண்டு பேரும் மாறி மாறி இழுத்ததில் நகை அறுந்தது. இதில் பத்மாவதி கையில் பாதி நகையும், திருடன் கையில் பாதி நகையும் கிடைத்தது. அந்த நகையுடன் அவன் தப்பி ஓடிவிட்டான். பட்டப் பகலில் நடந்த இந்தக் கோவில் கொள்ளை சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
அதேபோல, அரவக்குறிச்சி அருகே சீத்தாம்பட்டியில் மாரியம் மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. நேற்று விழாவின் இறுதி நாளாகும். இதனால் அமராவதி ஆற்றில் இருந்து பக்தர்கள் நீர்க் கலசம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பிரபு (25) என்பவர் நடனம் ஆடிக் கொண்டே வந்தார். இதற்குக் கோவில் நிர்வாகி நவநீதன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் பிரபு - நவநீதன் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் நவநீதன், ஜேபதி, பிரபு, கிருஷ்ண மூர்த்தி ஆகியோருக்குப் படுகாயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த 4 பேரும் பள்ளப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு முதலில் யாருக்கு மருத்து வர்கள் சிகிச்சை அளிப்பது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனை யில் கிடந்த நாற்காலி, பெஞ்சுகளை இருதரப்பினரும் உடைத்து எறிந்தனர். இதனால் அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தனர். மேலும் கரூர் அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவ மனையைச் சூறையாடிய 4 பேர் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே தைலாக்குளம் கிராமத்தில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று நடந்த திருவிழா வில் இருதரப்பினர் இடையே பிரச்சினை எழுந்தது. சிறிது நேரத்தில் அதுவே மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அப்போது சரமாரியாகக் கற்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு நின்றவர்கள் சிதறி ஓடினர்.
அதேநாளில் ஓமலூரை அடுத் துள்ள நாச்சனம்பட்டி பகுதியில் மாரியம்மன் கோவில் கும்பாபி சேகம் நடந்தது. விழாவில் நாச்சனம் பட்டி, காடையாம்பட்டி, நடுப் பட்டி, தீவட்டிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் காடையாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமியம்மாள், எல்லம்மாள் ஆகியோரும் கோவில் முன்பு நின்று இருந்தனர். அப்போது சிலர் லட்சுமியம்மாள் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் சங்கிலியையும், எல்லம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியையும் பறித்துச் சென்று விட்டனர்.
கூட்டத்தில் அந்தக் கொள்ளையர் களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தீவட்டி பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து கொள் ளையர்களைத் தேடி வருகின்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறும் போது, கூட்ட நெரிசலில் யார் எங்கே நிற்கிறார்கள் என்றே தெரிய வில்லை. மேலும் கொள்ளையர் களை அடையாளம் காண முடிய வில்லை. காவல் துறையினர் பாது காப்பு சரியாக இல்லை. போது மான பாதுகாப்பு கொடுக்கப்பட்டி ருந்தால் இந்தக் கொள்ளை சம்பவம் நடந்து இருக்காது என்று கூறியுள்ள னர். காவல் துறையின் பாதுகாப்பில் தான் குறை ஏற்பட்டது. கடவுளின் பாதுகாப்பில் ஏன் குறை ஏற்பட்டது?
ஆக கடவுளின் பெயரால் ஏற்படுகிற கலவரங்களும், சிந்தக் கூடிய இரத்தமும் என்றுதான் நிற்குமோ தெரியவில்லை? ஒட்டு மொத்த சமூகமும் விழிப் படைய அதிக காலம் தேவைப்படலாம். ஆனால் இந்தத் துயரங்களில் இருந்து ஒரு தனி மனிதன் உடனடியாக விடு பட முடியும். எப்படி என்கிறீர் களா? அவன் நாத்திகனாக மாறவேண்டும்!

வி.சி.வில்வம்

No comments:

Post a Comment