Thursday, October 21, 2010

அறிந்து கொள்வோம் அமெரிக்காவை.. 2

ஒப்புதல் வாக்கு மூலம்:

இந்த சி.அய்.ஏ - வின் வேலை ஆட்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஒரு நாட்டில் எல்லா மாநிலங்களுக்கும் பொது வாக எப்படி ஒரு மத்திய அரசு செயல்படுகிறதோ, அதுபோலவே உலகில் உள்ள அத்தனை நாடு களையும் ஒவ்வொரு மாநில மாகப் பாவித்து, அவற்றிற் கெல்லாம் மத்திய அரசாக அமெரிக்கா செயல்படுகிறது. இன்னும் ஒரே வரியில் சுருக்கி னால், அமெரிக்க அதிபர், அமெரிக்கா வுக்கு மட்டுமல்ல... உலக நாட்டிற்கே அவர்தான் அதிபர்! இதனை வலியுறுத்தி, செயல் படுத்தவே இந்த சி.அய்.ஏ. அமைப்பு. ஒரு நாடு தனக்கு எந்தளவு ஒத்துழைக்கிறதோ, அதைப் பொறுத்தே அந்நாட்டில் சி.அய்.ஏ. பணி இருக்கும். இவர் களின் நாசகாரச் செயல்களை நாம் பட்டியலிட வேண்டாம். இதோ “ பிலிப் ஆகீ” வருகிறார். இவர் சி.அய்.ஏ. அமைப்பின் முன்னாள் பணியாளர். “கம் பெனியில் உள்தகவல் - சி.அய்.ஏ. நாட்குறிப்பு” என்ற தனது நூலில் சி.அய்.ஏ.வின் முகமூடியை ஹாலிவுட் படம் போல கிழித் தெறிந்துவிட்டார். இதோ பிலிப்ஆகீ பேசுகிறார்.
“ சி.அய்.ஏ. வின் வேலை என்பது ஒரு நாட்டிற்குள் ஊடுருவது, எல்லைகளில் ஊடு ருவது, கிராம விவசாயிகளை அரசுக்கு எதிராக உசுப்பிவிடு வது, குண்டு வைப்பது, நீர், எண்ணெய், பெட்ரோலில் விசம் கலப்பது, எந்தத் தடயமும் இல்லாமல் அரசியல்வாதிகளைச் கொலை செய்வது, அரசியல் தலைவர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவது, பெண் களைப் பயன்படுத்துவது, அர சாங்கம் எதிராகச் செயல் பட்டால் பயங்கரவாதக் குழுக் களை அமைப்பது, கொரில்லா போர் நடந்த நிதி கொடுப்பது, ஆயுதங்களைக் கடத்தி எல்லை களிலும், நாட்டிற்குள்ளும் பரவ விடுவது, தகவல் தொடர்பு சாதனங்களை ஏற்படுத்துவது, இரகசியமாக வானொலி நிலை யங்கள் ஏற்பாடு செய்வது, இவற்றுக்கான தொழில்நுட்பம், கருவிகள், நிபுணத்துவம், நிதி, பாதுகாப்பு போன்றவற்றை அமெரிக்கத் தூதரகங்கள் மூலம் உருவாக்குவது, சிலவற்றிக்கு உள்ளூரிலேயே ஏஜெண்டுகளை நியமிப்பது, (இவ்விடத்தில் சுப்பிரமணிய சுவாமி போன்ற வர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) வன்முறை செய்வதற்கென்றே ஒரு குழுவை தயார் நிலையில் வைத்திருப்பது போன்றவைகள் சி.அய்.ஏ. வின் பணிகள்” என பிலிப் ஆகீ எழுதினார்.
அமெரிக்காவில் இது பெரும் பிரச்சினையான நேரத்தில் சி.அய்.ஏ.வின் முன்னாள் இயக்குநர் வில்லியம் கோல்பி மேலும் சில தகவல்களை வெளி யிட்டார். என்ன சொன்னார் தெரியுமா?
“பிலிப் ஆகீ சொன்ன தெல்லாம் சரிதான்! எனக்கும் கூட பல வெளிநாட்டு அரசியல் வாதிகளைக் கொலை செய்ய உத்தரவிடப்பட்டது. சிகரெட், சுருட்டு இவற்றில் விஷம் தடவி அனுப்புவது, விஷப்பூச்சிகளைக் கைத்துப்பாக்கி மூலம் செலுத்து வது, விஷத்துளிகளை உடை களில், காலணியில் பரவவிடு வது, சிகரெட் பெட்டிகளில் கண்ணிவெடி தயாரிப்பது, தேநீர் மற்றும் இருமல் மருந்துகளில் விஷம் சேர்ப்பது, டெலிவிசன் காமிராவில் துப்பாக்கியை மறைத்து வைப்பது, விரல்களில் விஷமோதிரம் அணிந்து கொல் வது போன்ற பல உத்திகள் எங்களுக்குப் பயிற்றுவிக்கப் பட்டு, அதனை நாங்கள் நடை முறைப்படுத்தியுள்ளோம்”, என்று ஒப்புதல் வாக்குமூல மாகவே கொடுத்தார்.
அமெரிக்க இராஜ்யம்:
இதுபோன்ற வேறு சிலரும் கூட வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இருந்தும் என்ன செய்ய? அமெரிக்காவை யாரும் ஏதாவது செய்துவிட முடியுமா? குறைந்தது கேள்விதான் கேட்டு விட முடியுமா? அமெரிக்கா விற்குப் பல நாடுகள் வெளிப் படையான அடிமைகளாக இருக்கிறார்கள். சிலர் மறை முகமாக இருக்கின்றனர். அள வில்லாமல் கடன் வாங்கியதா லேயே பல நாடுகள் அமெரிக் காவிடம் அமைதிகாக்கின்றன. பணம் தேவைப்படாத நாடு களுக்கு அமெரிக்கக் கலாச் சாரம் போய் சீரழிக்கும். இரண் டையும் மறுப்பவர்களுக்கு அமெரிக்கத் துப்பாக்கிகள் வழி செய்து கொடுக்கும். அப்படியும் அடங்க மறுத்தால் சதாம் உசேன் நிலைதான்!
இதே போன்ற நிலைக்கு ஆளானவர்கள்தானே சிலியின் அலண்டே, வியத்நாமின் ஹோசி மின், லிபியாவின் முகமது கடாஃபி, ஈரானின் மொசாடே, ஈக்வடாரின் வெலா°கோ இபாரா, நிகரகுவாவின் டேனி யல் ஒர்ட்டேகா, ஹெய்ட்டியின் அரி°டைட்... இன்னும் இன்னும் பெரும் பட்டியல்! இவர்களிடம் பாதிக்காத நாடுகள் என ஒன்றைச் சொல்லிவிட முடியுமா? நம் சம காலத்து நிகழ்வான சோவியத் ரஷ்யா! இரண்டாம் உலகப் போரில் பாசிச சக்திகளை ஒழித்துக் கட்டி, பல நாடுகளையும் காப்பாற்றிய வீரம் செறிந்த மண்ணல்லவா சோவியத் மண்! அந்த மண்ணையே குத்திக் கிளறிவிட்டார்களே? தங்கள் உடம்பின் ஒவ்வொரு பாகங் களையும் பிய்த்து எறிவதைப் போல சமூகவியலார்கள் கதறி னார்களே... விட்டதா அமெரிக் கா? இறுதியில் அநீதிதானே வென்றது.
சி.அய்.ஏ. வில் பணிபுரிந்த ‘ஜிபினியூ’ என்பவர் தனது ‘முழுப்போர்’ என்ற நூலில் இரஷ்யக் கவிழ்ப்பு குறித்து அப்பட்டமாக எழுதியுள்ளாரே! சோவியத் யூனியனைச் சிதறடிப் பதற்காகவே இசுலாமிய மாண வர்களைப் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் மத்திய ஆசியாவில் நிகழ்ந்துள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு மட்டும் 22,500 கோடியாகும். இவர்களுக்கு விர்ஜீனியாவின் உளவாளி பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உலகெங்கும் நாசகார செயலைச் செய்வதற்காகவே இங்கு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் பல நாடு களுக்கும் பிரித்து அனுப்பப் படுவார்கள். அப்படித் தயார் செய்யப்பட்டவர்கள்தான் இந்தத் தலிபான்கள் (தலிபான் என்றால் மாணவர்கள் என்று பொருள்) இந்தத் தலிபான்கள் தான் பின்னாளில் “அல்கைதா” அமைப்பின் தளபதிகளாக மாறிப் போனவர்கள். ஆக உலகின் எந்தவொரு தீவிரவாத, பயரங்கவாதக் குழுக்களுக்கும் அடிப்படை அமெரிக்காதான்!
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜி யாவில் பென்னிங் கோட்டையில் மட்டும் இதுவரை 60,000 பயரங்கவாதிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவை யெல்லாம் ஏதோ இரகசியமாக நடக்கிறது என யாரும் கருதத் தேவையில்லை. சி.அய்.ஏ. செய்யும் அத்தனை அட்டூழிய, நாச காரியச் செயல்களையும் ஒவ் வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடும். உலக நாடுகள் படிக்கவே அச்சப் படும் செய்திகளை, அவர்கள் வெளிப்படையாகவே வெளி யிடுகிறார்கள். இவற்றையெல்லாம் நாங்கள்தான் செய்தோம். எங்களை யார் என்ன செய்து விட முடியும்?” என்ற கேள்வி உலக நாடுகளுக்குத் தொடர்ச்சி யான எச்சரிக்கை அறிவிப்பு களாகவே இருந்து வருகிறது.

வி.சி.வில்வம்