Tuesday, October 19, 2010

செய்வார்களா காதலர்கள்?


உலகம் முழுவதும் பிப்-14. காதலர் தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்நிலையில் காதலர் தினத்தை எதிர்த்து இந்து மதவெறிக் கும்பல்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளன. அண்மையில், திருச்சியில் விசுவ இந்து பரிஷத் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் காதல் ஜோடிகளை விரட்டியடிப் போம் என அவர்கள் முழக்கமிட்டுள்ளனர். அது மட்டு மின்றி, இந்து கலாச்சாரத்தை (?) இழிவுபடுத்தும் காதலர் தினத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், திருக்கோவில்களிலோ, பொது இடங்களிலோ காதல் ஜோடிகள் இருந்தால் அவர்களை அப்புறப்படுத்துவோம் எனவும் தீர்மானம் இயற்றியுள்ளனர்.
அதேபோல மற்றொரு இந்து மதவெறி அமைப்பு ஒன்று, கோவில்களுக்குள் காதலர்கள் வரக்கூடாது. மீறி வந்தால் தாலியைக் கொடுத்து உடனே கட்டச் சொல்லுவோம் என மிரட்டியுள்ளது.

பொதுவாகவே இந்தியா முழுக்கவும் பஜ்ரங்தள், சிவசேனா, ஆர்.எஸ். எஸ் , பாஜக என அனைத்து மதவெறி அமைப்புகளுமே காதலர் தினத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும், வன் முறையிலும் ஈடுபட்டு வருகின்றன. அது சரி! காதல் மீது மதவெறி அமைப்புகளுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

காதலர்கள் மீது முற்போக்காளர்களுக்கு ஓர் வருத்தம் உண்டு. காதல் எனப்படும் உணர்வைச் சரியாகப் புரிந்து கொண்டு, அந்தக் காதல் நடவடிக்கைகள் கல்வியை, பணியைப் பாதிக்காத வண்ணம், உணர்ச்சி வசப்படாமல் காதல் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என முற்போக்காளர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் மதவெறி அமைப்புகள் என்ன சொல்கின்றன? காதலர் தினத்தை எதிர்ப்போம், காதலர்களை விரட்டியடிப்போம் என வெறித்தனமாகக் கூறுகின்றனர். அறியாமையில் காதல் உணர்ச்சி வசப்பட்டு, வாழ்க்கையில் தோற்றுவிடக் கூடாது என அறிவுரை கூறினால் அது வேறு செய்தி. ஆனால் காதலர் தினத்தையே எதிர்க்கிறோம் என்றால் என்ன பொருள்?
இங்குதான் பார்ப்பனீய நச்சு வேலை செய்கிறது. காதலர்கள் எனப்படுபவர்கள் பெரும்பாலும் வெவ்வேறான ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது அவர்களின் பார்வையில் பிற்போக்குத்தனம். ஏனெனில் இது ஒரு சாதி மறுப்புத் திருமணமாகும். இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொன்னால், ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொண்டால்தான் அது பார்ப்பனர்களின் பார்வையில் ‘முற்போக்குத்தனம்’!

இந்த முற்போக்கின் அடிப்படையிலேயே பார்ப்பன இந்து மதவெறி அமைப்புகள் காதலர் தினத்தை எதிர்த்து வருகின் றனர். காதலர் தினத்தை மட்டுமல்ல, யாருமே காதலிக்கக் கூடாது என்பதுதான் இவர்களின் கொள்கையே(!).  இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த இந்த அமைப்புகள் படாதபாடுபடுகின்றன.  காதலர் தின வாழ்த்து அட்டைகளை தீ வைத்துக் கொளுத்துவதும், காதலர்களைக் கண்டால் விரட்டியடிப்போம் என வன்முறை பேச்சு பேசுவதும், கோவிலுக்குள்  நுழையவிடமாட்டோம் எனக் கொக்கரிப்பதுமாக இருக்கின்றனர். இதுவும் ஒரு வகையில் நல்லதுதான். காதலர்கள் அனைவரும் கோவிலுக்குப் போகமாட் டோம் என உறுதியேற்க வேண் டும். அதே நேரத்தில் காதலர் களின் தனிமனித உரிமையில் அநாகரிமாக தலையிடும் இந்து மதவெறி அமைப்புகளின் முகத்திரைகளைக் காதலர்கள் கிழித்தெறிய வேண்டும்.

கலாச்சாரம், பண்பாட்டுச் சீரழிவு எனும் பெயரில் காதலர் தினத்தை எதிர்க்கிறார்களாம். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டின் மொத்த சீர்குலை வுக்கும் ஒட்டு மொத்தக் காரணமே இந்தச் சாக்கடைப் பார்ப்பனீயம்தானே! காதலிப்பதால் சீரழிவு ஏற்படுகிறது என்றால், பார்வதி குளியலை சிவன் பார்த் தது, ஆணும், ஆணும் உடலுறவு கொண்டது, தந்தையும் மகளும் உடலுறவு கொண்டது, மாரியம்மன் தெருவில் நிர்வாணமாக ஓடியது, கிருஷ்ணன் குளிக்கும் பெண்களின் உடைகளை எடுத்துக் கொண்டு, நிர்வாணமாக மேலே வா எனக் கூறியது, தசரதன் 60,000 பெண்களோடு குடும்பம் நடத்தியது, அம்மாவைப் போலவே மனைவி வேண்டும் என பிள்ளையார் அசிங்கமாய் வசனம் பேசியது, நாரதரும், கிருஷ்ண னும் உடலுறவு கொண்டது, விஷ்ணுவும், சிவனும் உடலுறவு கொண்டது எனப் பார்ப்பனர்களின் இந்து மத அமைப்பே அசிங்கத்தின் உச்சக் கட்டம் தானே!


இந்நிலையில் கலாச்சாரத்தைக் காக்க வந்த புனிதர்களாக இந்த மதவெறியர்கள் வேடம் தரிக்கின்றனர். இந்த வேடத்தை யார் கலைப்பது? காதலர்கள்தான் கலைக்க வேண்டும். அவர்களுக்குத் தகுந்த சூடு வைக்க வேண்டும்.

செய்வார்களா காதலர்கள்?

                                                                                                              வி.சி.வில்வம்