Monday, September 5, 2016

முகநூல் பதிவுகள்!

   முகநூல் பதிவுகள்!      மரபணு மூலம் விளையும் தக்காளியில், தவளையின் "ஸ்டெம் செல்" இருக்கிறதாம்!
அப்ப... தவளைக்கறி உள்ள தக்காளி சைவமா? அசைவமா?

 
 
செத்த மாட்டைத் தூக்க மாட்டோம், கழிவறையைச் சுத்தம் செய்ய மாட்டோம், பிணம் எரிக்க மாட்டோம் என்றால் நீயும் எம் தோழனே!

 
 
பசு மாடு எங்கள் தாய் - ஆர்.எஸ்.எஸ்.
இனி உங்கள் தாய் இறந்தால், நீங்களே தூக்கிக் கொள்ளுங்கள்!

 
 
"அடுத்த வீட்டுகாரருடன் நட்பாய் இரு!அதற்காக இடையில் உள்ள சுவரை எடுத்து விடாதே!
நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!

 
 
பார்ப்பனீயத்திடம் தன்னை விற்றுக் கொண்டு, தமிழர்களுக்குத் துரோகம் செய்தவர்கள் பெங்களூர் குணா, விடுதலைச் சிறுத்தைகள் இரவிக்குமார், நாம் தமிழர் சீமான்.

 
 
முக"நூல்" ஆபத்து - தந்தி டிவி பாண்டே
உம் முதுகில் தொங்கும் "நூலை" விடவா?

 
 
70 ஆவது சுதந்திர தினம் நாளைக்கு!
யாருக்கு?

 
 
தமிழ்த்தாய், தமிழ்த்தாய் என்கிறீர்களே... அவர் எங்கு இருக்கிறார்?
நீங்கள் பாரதத் தாய், பாரதத் தாய் என்கிறீர்களே, அவரின் பக்கத்து வீடு - சி.பி.சிற்றரசு

 
 
364 நாளும் இந்தியாவை "செல்லரிக்க" வைக்கும் அரசியல்வாதிகள், ஆகஸ்ட் 15 மட்டும் "புல்லரிக்க" வைக்கிறார்கள்!

 
 
"கடவுள் நம்பிக்கை இல்லாத நீங்கள் உருப்பட மாட்டீர்கள்", என்றார் நண்பர்.
பரவாயில்லை! நீங்க நல்லா இருந்தா போதும்!

 
 
பெண்களைக் கேவலமாக நினைக்கும் இந்த நாட்டிற்குத் தான், ஒரு பெண் வெண்கலம் வாங்கித் தந்துள்ளார்!
பாராட்டுகள் சாக்சி மாலிக்!

 
 
அனுமார் கொண்டு வந்த சஞ்சீவி மூலிகையைக் கண்டுபிடிக்க, உத்ரகாண்ட் அரசு 25 கோடி ஒதுக்கீடு!
நல்ல வேளை! அனுமாரைக் கண்டுபிடிக்க 250 கோடி ஒதுக்கவில்லை!

 
 
அரசியலில் விளையாட்டும், விளையாட்டில் அரசியலும் இருப்பதால், குடிக்கக் கூட தண்ணீர் இல்லை. மன்னிக்கவும் ஜெய்ஷா!
பாரத் மாதா கி ஜெய்!

 
 
இந்தியாவில் இந்து மதத்தையும், பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தையும் ஒழித்து விட்டால், இரு நாடுகளும் இன்பம் பெறும்!

 
 
"சமஸ்கிருதம் தேவை" என்பதை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் சொல்லிவிட்டார்கள்.
சமஸ்கிருத மொழியில் மட்டும் இன்னும் சொல்லவே இல்லை!

 
 
பாதயாத்திரை எனும் பெயரில், குழந்தைகளைத் தரதரவென இழுத்துப் போகிற பெற்றோர்கள் கொடுமையானவர்கள்!

 
 
பயப்படும் அளவு பிள்ளையார் செய்து, வீதி தோறும் விசில் அடித்து, மக்களை விரட்டியும், மிரட்டியும் ஊர்வலம் சென்று, பின்னர் தண்ணீரில் மூழ்கடித்து, தேவைப்பட்டால் கிரேனில் தூக்குமாட்டி, சில நேரங்களில் அடித்தும், உடைத்தும், தொப்பையில் ஏறி நின்றுமாக உங்கள் விநாயகர் பக்தியைத் தொடங்குங்கள் பக்தர்களே!

 
 

முகநூல் பதிவுகள்!

   முகநூல் பதிவுகள்!      
அம்மன் கோயில்களில் கூழு ஊற்ற அரிசி தாருங்கள் - ராம கோபாலன்.
2000 வருசமா பிச்சை எடுக்கிற ஒரே இனம் நீங்கதான்... கின்னஸ் சாதனை!

 
 
ஆப்பிரிக்கக் கடவுள் கருப்பாகவும், வெள்ளையர் கடவுள் சிகப்பாகவும் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
மனிதன் தான் கடவுளைப் படைத்தான் என்பதற்கான சான்று அது!

 
 
பேரறிவாளன் குறித்துப் பேச நடிகர் விஜய் சேதுபதி யார்? அவர் ஓர் தெலுங்கர் - நாம் தமிழர்கள்
அப்ப... தமிழன் ராஜபக்சே பேசலாமா?

 
 
ஏன் இந்து மதத்தை மட்டும் திட்டுகிறீர்கள்?
இந்து மதம் ஒழிக! இஸ்லாம் மதம் ஒழிக! கிறிஸ்தவ மதம் ஒழிக! பெயர் தெரியாத பிற மதங்களும் ஒழிக! மனிதர்கள் மட்டும் வாழ்க!

 
 
இந்தியா வல்லரசாக மாறும் - ராஜ்நாத் சிங்.
ஏற்கெனவே இதை விஜயகாந்த் சொல்லிட்டாரு!

 

"ISO தரச்சான்று பெற்ற ஜோதிட நிலையம்" என்கிறது ஒரு விளம்பரம்.
மோசடி வேலைக்கும் தரச்சான்று கொடுத்தாச்சா?

 
 
பெரியாரை இனி திட்டாதீர்கள் - சீமான்
ஏன்... திட்டுவதற்குப் போட்ட "காண்ட்ராக்ட்" முடிஞ்சிருச்சா?

 
 
காவிரி ஆற்றில் 7 கடவுள் சிலைகள் கிடந்தன - செய்தி
வெயில் அதிகம் இருப்பதால், குளிக்கப் போயிருப்பார்கள்!

 
 
என் நண்பர் அதிர்ச்சியாய் கேட்கிறார், "கடவுள் இல்லை என்று உங்களால் எப்படித்தான் சொல்ல முடிகிறது?"
வாயால தான்!

 
 
சுவாதி கொலை தொடர்பாக ஸ்ரீரங்கத்தில் விசாரணை - தினமலர்
அங்க முதல்ல விசாரிங்க! மொத்தக் கேடும் அங்கதான் இருக்கு!

 
 
முகநூல், வாட்ஸ் அப் மூலம் பிரச்சினை ஏற்படுவதால், அவற்றைத் தடை செய்க!
ஜாதி, மதத்தின் மூலம் கொலையே நடப்பதால், அவற்றையும் தடை செய்க!

 
 
மதியம் சரியான பசி. தேவா மெஸ் எனும் பலகை கண்டு அருகில் சென்றால், அது தேவர் மெஸ்!
பட்டினியாக இருந்தாலும் பரவாயில்லை, ஜாதியை வளர்க்கக் கூடாது!

 
 
தென்னாப்பிரிக்காவில் காந்தி பயணித்த இரயிலில் சென்ற மோடி, இது ஒரு "தீர்த்த" யாத்திரை என்றாராம்!
காந்தியைத் "தீர்த்த" சாதனையும் உங்கள் இயக்கம் தானே செய்தது!

 
 
இந்தியாவை, அமெரிக்காவுக்கு மட்டும் விற்காமல், பல நாடுகளுக்கும் பகிர்ந்து விற்கிறார் மோடி!
உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... ஜெய்ஹிந்த்!

 
 
தீவிரவாதிகள் மூன்று வகைப்படுவர்!
இந்து தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி, கிறிஸ்தவ தீவிரவாதி.

 
 
மட்டக்களப்பில் ஒரு இஸ்லாமியர், "செலவு செய்து, மெக்கா போவதை விட, ஒரு ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்வதே மேல்", என்று அவ்வாறே செய்தவர். பெருநாள் சிறப்பாக முடிந்ததா? என எவரேனும் கேட்டால், எனக்கு 365 நாளும் பெருநாளே என்கிறார்.

 
 
பெரியாருக்கும், எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் முப்பாட்டன் ஒரு மருத்துவர், என் பாட்டன் ஒரு வழக்கறிஞர், என் தாத்தா ஒரு பொறியாளர். நாங்கள் எவருக்கும் அடிமையாய் வாழ்ந்ததில்லை. எங்களுக்குச் சுயமரியாதையைப் பெற்றுத் தந்தவர்கள் ஆரியர்கள். எங்களின் கல்விச் செலவுகளைப் பிராமணர் சங்கமே ஏற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளாக நாங்கள் இப்படித்தான் சிறப்போடு வாழ்கிறோம். எனவே எங்களுக்கும், பெரியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

 
 
அம்பேத்கர் படத்தை வீட்டில் மாட்டினால், "தலித்" என்று நினைப்பார்களாம்!
நினைக்கட்டுமே! இந்து மதம் "தேவடியா மகன்" என்று சொல்வதை விட, இது ஒன்றும் குறைவில்லை!

 
 
அழுக்கு, புழு, எச்சில், மலம் சாப்பிடும் கோழியை உண்டால் உயர்ந்த ஜாதியாம்!
பசும்புல், தவிடு, புண்ணாக்கு சாப்பிடும் மாட்டை உண்டால் தாழ்ந்த ஜாதியாம் - தந்தை பெரியார்

 
 
ரொம்ப நேரம் கட்டிப் போட்ட கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டால், கொஞ்சம் துள்ளிக் குதித்து தான் நிற்கும்.
அது துள்ளிக் குதிப்பதில் குற்றமில்லை. கட்டிப் போட்டதே குற்றம் - பெரியார்

 
 
ரஜினி ரசிகரான கள்ளர் ஜாதி சகோதரரும் கபாலியை விரும்புகிறார்! ரஜினியை வெறுக்கிற தலித் சகோதரரும் கபாலியை விரும்புகிறார்!
இதுதான் ரஞ்சித் வெற்றி!

முகநூல் பதிவுகள்!

   முகநூல் பதிவுகள்!      
இந்தியாவில் பிறந்த எந்தப் பார்ப்பனரும், அம்பேத்கருக்கு இணையாக முடியாது!
பிறந்த நாள் வாழ்த்துகள் மேதையே!

 
 
நான் எவ்வளவு பெரிய தூங்கு மூஞ்சியா இருந்தா, பல்லு விளக்க பேஸ்டுக்குப் பதிலா, சேவிங் கிரீமை வச்சுருப்பேன்... உவ்வே!

 
 
உங்களுக்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியும் - ஜெயலலிதா
உங்களுக்கு என்ன தேவை என்பதும் எங்களுக்குத் தெரியும்.... ஓட்டுதானே?

 
 
திராவிட கட்சிகளை நான் மதிப்பதில்லை - பாரிவேந்தர்
பெற்றோர் வைத்த "பச்சமுத்து" எனும் பெயரை "கேவலம்" என மாற்றிய பாரிவேந்தரா பேசுவது?

 
 
இலட்சக்கணக்கில் வெட்டி, மரங்களை இனப் படுகொலை செய்தோம்.
இன்று நம் உடல், வியர்வையால் அழுகிறது!

 
 
"கயவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள்," என்கிறார் வள்ளுவர்.
அரசியல் தலைவர்களைச் சொல்றாரோ?

 
 
என்னைச் சிலருக்குப் பிடிக்கவில்லை - சீமான்
ஆனால்... அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரிகளுக்கு அம்பியை ரொம்பப் பிடிச்சிருக்கு!

 
 
"பெரியார் திராவிடத்தின் குறியீடு" - சீமான்
நீங்கள் துரோகத்தின் குறியீடு!

 
 
தமிழ்நாட்டில் பாஜக 'ஒட்டு'
சதவிகிதம் அதிகரிப்பு - இல.கணேசன்
வீட்டுக்கு மேல போடுற 'ஓட்டை' சொல்றாரோ?

 
 
எத்தனையோ எதிர்ப்புகளை நான் சந்தித்து விட்டேன் - ஹெச்.ராஜா
இன்னமும் 'ரோஷம்' வரலையே ராஜா!

 
 
ஒவ்வொரு ஆண்டும் மே-1 தொழிலாளர்கள் தினமாகவும், மீதம் 364 நாட்கள் முதலாளிகள் தினமாகவும் உள்ளது!

 
 
'இயேசு வருகிறார்' என வீடு, வீடாக நோட்டிஸ் கொடுக்கிறார்கள்.
என் சித்தப்பா கூட நாளை எங்கள் வீட்டிற்கு வருகிறார். அதற்காக ''சித்தப்பா வருகிறார்'' என நோட்டிஸ் கொடுக்க முடியுமா என்ன?

 
 
கையெடுத்துக் கும்பிடுகிற வேட்பாளரிடம்
ஜெயித்த பிறகு, காலில் விழுந்து கேட்டாலும் எதுவும் நடப்பதில்லை.

 
 
நாம் தமிழர் நண்பர், என்னைப் பார்த்து 'நீ தமிழனா?' என்று கேட்கிறார்.
முதலில் சீமானைப் பார்த்துக் கேளுங்கள்!

 
 
சிங்களவர்கள் அனைவரும் நாயக்கர்கள் - சீமான்
ஆமாம்! அய்.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் கூட நாயக்கர் தான்!

 
 
தமிழர்கள் தங்கள் பெயருக்குப் பின் ஜாதியை எழுத வேண்டும் - சீமான்
ஒ.. எழுதலாமே! "சீமான் நாடார். இந்து மதப்படி சூத்திரன். அதாவது வேசி மகன்" என எழுதலாமா மிஸ்டர் சீமான்?

 
 
உங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல... புரிந்து கொண்டோம்!
எங்கள் நாடும் விற்பனைக்கு அல்ல... தெரிந்து கொள்க!

 
 
"நான் உன்னைக் கைவிடுவதும் இல்லை! விட்டுவிலகுவதும் இல்லை!" - பைபிள்
பார்த்தேன்... பார்த்தேன்... இந்த வரி எழுதப்பட்ட கார் ஒன்று, விபத்தாகி தலைகீழாகக் கிடந்ததை நேற்று பார்த்தேன்.

 
 
தேர்தல் முடிவு என்ன சொல்கிறது?
பெரியார் கொள்கைக்குத் துரோகம் செய்கிற எவரும் ஜெயிக்க முடியாது.

 
 
நீ தமிழனா? நீ தமிழனா? என எல்லோரையும் கேட்டார்கள் "நாம் தமிழர்கள்"
தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து, இப்போது சீமானைக் கேட்டு விட்டார்கள்!