Monday, September 5, 2016

முகநூல் பதிவுகள்!

   முகநூல் பதிவுகள்!      
அம்மன் கோயில்களில் கூழு ஊற்ற அரிசி தாருங்கள் - ராம கோபாலன்.
2000 வருசமா பிச்சை எடுக்கிற ஒரே இனம் நீங்கதான்... கின்னஸ் சாதனை!

 
 
ஆப்பிரிக்கக் கடவுள் கருப்பாகவும், வெள்ளையர் கடவுள் சிகப்பாகவும் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
மனிதன் தான் கடவுளைப் படைத்தான் என்பதற்கான சான்று அது!

 
 
பேரறிவாளன் குறித்துப் பேச நடிகர் விஜய் சேதுபதி யார்? அவர் ஓர் தெலுங்கர் - நாம் தமிழர்கள்
அப்ப... தமிழன் ராஜபக்சே பேசலாமா?

 
 
ஏன் இந்து மதத்தை மட்டும் திட்டுகிறீர்கள்?
இந்து மதம் ஒழிக! இஸ்லாம் மதம் ஒழிக! கிறிஸ்தவ மதம் ஒழிக! பெயர் தெரியாத பிற மதங்களும் ஒழிக! மனிதர்கள் மட்டும் வாழ்க!

 
 
இந்தியா வல்லரசாக மாறும் - ராஜ்நாத் சிங்.
ஏற்கெனவே இதை விஜயகாந்த் சொல்லிட்டாரு!

 

"ISO தரச்சான்று பெற்ற ஜோதிட நிலையம்" என்கிறது ஒரு விளம்பரம்.
மோசடி வேலைக்கும் தரச்சான்று கொடுத்தாச்சா?

 
 
பெரியாரை இனி திட்டாதீர்கள் - சீமான்
ஏன்... திட்டுவதற்குப் போட்ட "காண்ட்ராக்ட்" முடிஞ்சிருச்சா?

 
 
காவிரி ஆற்றில் 7 கடவுள் சிலைகள் கிடந்தன - செய்தி
வெயில் அதிகம் இருப்பதால், குளிக்கப் போயிருப்பார்கள்!

 
 
என் நண்பர் அதிர்ச்சியாய் கேட்கிறார், "கடவுள் இல்லை என்று உங்களால் எப்படித்தான் சொல்ல முடிகிறது?"
வாயால தான்!

 
 
சுவாதி கொலை தொடர்பாக ஸ்ரீரங்கத்தில் விசாரணை - தினமலர்
அங்க முதல்ல விசாரிங்க! மொத்தக் கேடும் அங்கதான் இருக்கு!

 
 
முகநூல், வாட்ஸ் அப் மூலம் பிரச்சினை ஏற்படுவதால், அவற்றைத் தடை செய்க!
ஜாதி, மதத்தின் மூலம் கொலையே நடப்பதால், அவற்றையும் தடை செய்க!

 
 
மதியம் சரியான பசி. தேவா மெஸ் எனும் பலகை கண்டு அருகில் சென்றால், அது தேவர் மெஸ்!
பட்டினியாக இருந்தாலும் பரவாயில்லை, ஜாதியை வளர்க்கக் கூடாது!

 
 
தென்னாப்பிரிக்காவில் காந்தி பயணித்த இரயிலில் சென்ற மோடி, இது ஒரு "தீர்த்த" யாத்திரை என்றாராம்!
காந்தியைத் "தீர்த்த" சாதனையும் உங்கள் இயக்கம் தானே செய்தது!

 
 
இந்தியாவை, அமெரிக்காவுக்கு மட்டும் விற்காமல், பல நாடுகளுக்கும் பகிர்ந்து விற்கிறார் மோடி!
உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... ஜெய்ஹிந்த்!

 
 
தீவிரவாதிகள் மூன்று வகைப்படுவர்!
இந்து தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி, கிறிஸ்தவ தீவிரவாதி.

 
 
மட்டக்களப்பில் ஒரு இஸ்லாமியர், "செலவு செய்து, மெக்கா போவதை விட, ஒரு ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்வதே மேல்", என்று அவ்வாறே செய்தவர். பெருநாள் சிறப்பாக முடிந்ததா? என எவரேனும் கேட்டால், எனக்கு 365 நாளும் பெருநாளே என்கிறார்.

 
 
பெரியாருக்கும், எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் முப்பாட்டன் ஒரு மருத்துவர், என் பாட்டன் ஒரு வழக்கறிஞர், என் தாத்தா ஒரு பொறியாளர். நாங்கள் எவருக்கும் அடிமையாய் வாழ்ந்ததில்லை. எங்களுக்குச் சுயமரியாதையைப் பெற்றுத் தந்தவர்கள் ஆரியர்கள். எங்களின் கல்விச் செலவுகளைப் பிராமணர் சங்கமே ஏற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளாக நாங்கள் இப்படித்தான் சிறப்போடு வாழ்கிறோம். எனவே எங்களுக்கும், பெரியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

 
 
அம்பேத்கர் படத்தை வீட்டில் மாட்டினால், "தலித்" என்று நினைப்பார்களாம்!
நினைக்கட்டுமே! இந்து மதம் "தேவடியா மகன்" என்று சொல்வதை விட, இது ஒன்றும் குறைவில்லை!

 
 
அழுக்கு, புழு, எச்சில், மலம் சாப்பிடும் கோழியை உண்டால் உயர்ந்த ஜாதியாம்!
பசும்புல், தவிடு, புண்ணாக்கு சாப்பிடும் மாட்டை உண்டால் தாழ்ந்த ஜாதியாம் - தந்தை பெரியார்

 
 
ரொம்ப நேரம் கட்டிப் போட்ட கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டால், கொஞ்சம் துள்ளிக் குதித்து தான் நிற்கும்.
அது துள்ளிக் குதிப்பதில் குற்றமில்லை. கட்டிப் போட்டதே குற்றம் - பெரியார்

 
 
ரஜினி ரசிகரான கள்ளர் ஜாதி சகோதரரும் கபாலியை விரும்புகிறார்! ரஜினியை வெறுக்கிற தலித் சகோதரரும் கபாலியை விரும்புகிறார்!
இதுதான் ரஞ்சித் வெற்றி!

No comments:

Post a Comment