Monday, September 5, 2016

முகநூல் பதிவுகள்!

 முகநூல் பதிவுகள்!


ஜே.என்.யு. மாணவர்களை நாயைப் போல சுட வேண்டும் - பாஜக
எங்க, நேத்து வாங்குன புது செருப்பை காணோம்?
300 Chandru Mayas, Che Vignesh VN மற்றும் 298 பேர் 6 shares

 
முஸ்லிம்களில் 4 பேரில் ஒருவர் தீவிரவாதி - அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட்
அமெரிக்கர்களில் 4 பேரில் நால்வருமே தீவிரவாதிகள் தான் மிஸ்டர் டொனால்ட்.
 
 
 ஜெயலலிதா - அன்புமணி இடையே தான் கடும் போட்டி - ராமதாஸ்
பேசுனா சீரியசா பேசுறது, இல்லைனா ஜோக்கா பேசுறது...
 
 
தீவிரவாத இயக்கங்கள் தேர்தலில் வெற்றி பெற திட்டம் தீட்டுகின்றன - தமிழிசை
உங்கள் கட்சியை நீங்களே இப்படி சொல்லக் கூடாது தமிழிசை.
 
 
''பாரத் மாதா கி ஜே'' என்று சொல்ல மறுத்த, மகாராஷ்டிர எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்.
அதே பாரத மாதாவின் கொடியில், மூக்குச் சளி சிந்திய மோடி எப்போது சஸ்பெண்ட்?

 
 
எங்கள் ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்தால் வெட்டுவோம்.
''இன்னார்க்கு இன்னாரென்று'' என எழுதி வைத்த கடவுளை வெட்டுங்கள்!

 
 
பிரியா சுருதி என்ற பெண், ''கடவுள் எங்கும் இருக்கிறார்'' குழுவில் என்னை சேர்க்க முயல்கிறார்.
எங்கும் இருக்கிற கடவுளிடம், எனக்கு 'Friend Request' கொடுக்க சொல்லும்மா!

 
 
"வன்னியர், தேவர், முத்தரையர், வெள்ளாளர் ஜாதி ஒற்றுமை சங்கம்" எனப் புதிய அமைப்பு உதயமாம்.
அதில் பிராமணர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

 
 
"தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?'' என பகத்சிங்கிடம் கேட்டார்கள். "பேபி" கையால் ரொட்டி வேண்டும் என்றார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண் சிறையில் மலம் அள்ளுபவர். ஆனால் பகத்சிங், 'அவர் தான் ரொட்டி செய்து தர வேண்டும்', என உறுதியாய் கூற, பேபி அழைத்து வரப்பட்டார். 'நான் மலம் அள்ளுபவர். ரொட்டி செய்து தர மாட்டேன்', எனக் கூறுகிறார். " என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுபவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள், தாயினும் மேலானவர் என்று சொன்ன பகத்சிங் நினைவு நாள் இன்று!

 
 
பெரியாரை திமுக மறக்க, காரல் மார்க்ஸை கம்யூனிஸ்டுகள் மறக்க, அம்பேத்கரை விடுதலைச் சிறுத்தைகள் மறக்க... கோட்சேவை மட்டும் பாஜக மறக்கவே இல்லை!

 
 
சென்னையில், ''யாருக்கும் தெரியாமல்'' அம்மன் சிலையைத் திருடியவர் கைது - செய்தி
யாருக்கும் தெரியாமல் என்றால், அம்மனுக்குக் கூட தெரியாமலா?

 
 
திருவிழாவில் சாமி கும்பிடும் இடத்தில் கூட்டம் குறைவாகவும், அன்னதானம் செய்யும் இடத்தில் அதிகமாகவும் இருக்கிறது. நாம் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.
பக்தியை விட, பசி முக்கியம்!

 
 "எல்லோருமே பல்லக்கில் ஏற ஆசைப்பட்டால், யார்தான் பல்லக்கைத் தூக்குவது" - எஸ்றா சற்குணம். 
 
யாரும் உட்காரவும் வேண்டாம், தூக்கவும் வேண்டாம். பல்லக்கை உடைந்து எறியுங்கள்!

 
 
"வேற்று மொழி பேசும் மக்களின் ஓட்டு எங்களுக்குத் தேவையில்லை" - சீமான்
சமஸ்கிருதம் பேசினால் பரவாயில்லையா மிஸ்டர் சீமான்?

 
 
"என் கட்சி செய்கிற எதுவும் தவறல்ல. எதிர் கட்சி செய்கிற எல்லாமே தவறு".
இவ்வளவு தான் தமிழன் அரசியல்!

 
 
கேரளா கோவிலில் 100 பேர் மரணம், 350 பேர் படுகாயம்.
இந்நேரத்தில் நாத்திகம் பேச விரும்பவில்லை. கூட்டம் அதிகமுள்ள கோயில்களைத் தவிர்ப்பீர்! உயிர்களைக் காப்பீர்!

 
 
தமிழ்நாட்டில், திருச்சியில் தான் வெயில் அதிகமாம்!
நாங்க யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? எங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை நடக்குது?

 
 
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல், பிணம் எரிக்கும் தொழில் செய்யும், மரியாதைக்குரிய ஆரோக்கியமேரி அவர்களுடன் ஓர் சந்திப்பு!

No comments:

Post a Comment