Thursday, October 21, 2010

அறிந்து கொள்வோம் அமெரிக்காவை...1


இந்தியாவும், இந்து மதமும் கடவுள் சங்கதி மாதிரி! இல்லவே இல்லை ரகம்! அதுபோலத் தான் அமெரிக்காவும்! அமெரிக்கர் என்று எவரும் கிடையாது. அவர்களுக் கென்று தொன்மை எதுவும் இல்லை. செல்வம் கொழிக்கும் செவ்விந்திய மண்ணில் குடியேறிய வந்தேறிகள் தான் அவர்கள். அய்ரோப்பாவில் இருந்து கொள்ளையடிப்பதற் காகவே வெள்ளையர்கள் ஒன்று கூடிய இடம்தான் இன்றைய அமெரிக்கா. ஆக, அமெரிக்கப் பிறப்பே, இந்துக் கடவுள்கள் போல அருவெறுக்கத்தக்கது. ஆக்கிர மிப்பில் பிறந்த அமெரிக்கா, பார்ப்பனரைப் போல தன் குணத் தை மாற்றிக் கொள்ள மறுக்கிறது.
கொலம்பஸ்
எனும் கொள்ளைக்காரன்!இந்தியாவில் இயற்கை வளம் மிகுந்திருப்பதை அறிந்த ஸ்பெயின் மன்னன் ஒரு அறிவிப்பு கொடுக் கிறான். “ இந்தியாவைக் கண்டு பிடிப்பவர்களுக்குப் பணமுடிப்பும், கொள்ளையில் 10 விழுக்காடும் தருவதாக அறிவிக்கிறார். இத்தாலி யின் ஜினோவா எனுமிடத்தில் ஒரு கடையில் வேலை செய்யும் கிறி°டோபர் கொலம்ப° என்பவர் தயாராகிறார். இவர் புதிய இடங் களை அறிவதில் ஆர்வமானவர். 1492 அக்டோபர் 12 இல் அய்ரோப்பாவிற்கும், ஆசியா விற்கும் இடைப்பட்ட ஒரு பகுதி யைக் காண்கிறார். அங்கிருந்த செவ்விந்திய மக்களையும், அரா வாக் மக்களையும் கண்டு, இவர்கள் தான் இந்தியர், இதுதான் இந்தியா எனத் தவறாக எண்ணி, °பெயின் மன்னருக்குத் தகவல் தருகிறார் கொலம்பஸ் அத்துடன் அவரனுப்பிய குறிப்பில், “ இங்குள்ள மக்கள் மிக நல்லவர்கள், சொல்வதை ஏற்கிறார்கள், எளிதில் ஏமாற்ற லாம். அதுமட்டுமின்றி இயற்கை வளங்கள் இறைந்து கிடக் கின்றன. கொள்ளையடிக்க ஆட்கள் போ தாது, பொருள்களைப் பாது காக்கக் கப்பல் போதாது”, எனத் தெரிவிக்கிறான். உடனே ஸ்பெயின் மன்னன் 17 கப்பல்களையும், 1200 கொள்ளையர்களையும் அனுப்புகிறான். கொலம்பஸ் தொடங்கி வைத்த கொள்ளை, இன்று அமெரிக்காவின் கொள் கையாகிப் போனது. மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர் எனக் கிறிஸ்டோபர் கொலம்பசை இவ்வுலகம் கொண்டாடுகிறது. ஆனால் அவன் செய்த ஆயிரமாயிரம் படுகொலை கள், அந்நாட்டில் அவனடித்த கொள்ளை ஆகியவற்றை வரலாறு துல்லியமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது.
செவ்விந்தியர்களின் மண்!செவ்விந்தியர்களின் பூர்வீக மண்தான் இன்றைய அடாவடி அமெரிக்கா! °பெயின் மன்னரால் அனுப்பப்பட்ட கொலம்பசும், அவனுக்குத் துணையாக சில ஆயிரம் பேர்களும்தான் முதலில் நுழைந்தனர். பின்னர் அய்ரோப்பா வின் பல வணிகர்களும், நிலச் சுவான்களும், கொள்ளை உள்ளம் கொண்ட அத்தனை வெள்ளை யர்களும் குழுமினர். வார்த்தை களில் உணர்த்த முடியாத அள விற்குச் செவ்விந்திய மக்களை ஒழித்துக் கட்டினர். 1494 இல் தொடங்கி 1508 வரை முப்பது இலட்சம் செவ்விந்தியர்களைக் கொன்றொழித்ததாக இளம் பாதிரி யாரும், வரலாற்று ஆய்வாளருமான லா° காஸா° என்பவர் பதிவு செய்துள்ளார். இவ்வரலாற்று உண்மைகளை எதிர்காலம் நம்புமா? எனவும் அவர்அய்யப்படுகிறார். அவ்வளவு கொடுமைகள்!

செவ்விந்தியர்கள் செல்வச் செழிப்புடனும், தனித்த நாகரிகத் துடனும் வாழ்ந்தவர்கள். இவர் களையொட்டி வாழ்ந்த கிரீக், சோக்டா, சிக்கராவாப் போன்ற பழங்குடியினரும் ஒன்றுபட்டு வாழ்வாங்கு வாழ்ந்துள்ளனர். இவர்களைக் கண்டால் சுட்டுத் தள்ள வேண்டும் என வெள்ளை யர்கள் ஒருமித்த முடிவு எடுக் கின்றனர். மேலும் செவ்விந்திய ஆண் கொலை செய்யப்பட்டால் 40 பவுண்டும், பெண்ணின் விலை 20 பவுண்டாகவும் தீர்மானிக்கப் படுகிறது. விளைவு மண்ணின் மைந்தர்கள் அனைவரும் அழிக்கப் பட்டனர். இப்போது ஒட்டு மொத்த செவ்விந்தியப் பரப்பும் வெள்ளையரின் கீழ் வருகிறது.
கறுப்பின சோகம்!அபகரிக்கப்பட்ட மண்ணில் ‘அடிமாட்டு’ வேலை செய்ய ஆள் வேண்டுமே. . . என்ன செய்யலாம் என உண்மையான கறுப்பு மனிதர்களான வெள்ளையர்கள் யோசிக்கிறார்கள். ஆப்பிரிக்க தேசம் சென்றால் ‘ஓட்டி’ வரலா மென கப்பல் எடுத்துச் செல் கின்றனர். துப்பாக்கியால் மிரட்டி யும், சாட்டையால் அடித்துத் துன்புறுத்தியும், கை, கால்களில் விலங்கு மாட்டியும் மனித வேட்டையாடுகின்றனர். இந்த அடிமை வணிகத்தில் மட்டும் 100 கப்பல்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. எந்தெந்த கறுப்பர் கள், எந்தெந்த வெள்ளையனின் அடிமை என்பதை அவர்களின் வெற்றுடம்பில் நெருப்பால் அடையாளமிட்டுள்ளனர். இந்த அடிமை வியாபாரத்தில் பல முகவர்களும் ஈடுபட்டு பணம் பார்த்துள்ளனர். ஆக, செவ் விந்தியர்களின் மண்ணில், ஆப்பிரிக்க மக்களின் உழைப்பைக் கொண்டு உடம்பையும், பணத் தையும் அமெரிக்கர்கள் வளர்த்துக் கொண்டனர். அமெரிக்க வரலாற் றை எழுதும் வெள்ளையர்கள் செவ்விந்தியர்களின் சோகம் குறித்து எழுதுவதே இல்லை, பாடத்திட்டங்களிலும் அவர்களின் வரலாறு இடம் பெறவில்லை.
கடவுளின் உத்தரவு!கொள்ளையன் கொலம்பசால் செவ்விந்திய மண் கண்டுபிடிக்கப் பட்டது 1492 இறுதியில்! அதன் பின்னர் ஏறத்தாழ 250 ஆண்டு களில் அதாவது 17 ஆம் -நூற்றாண்டின் இறுதிக்குள் - அட்லாண்டிக் கடல் தொடங்கி, பசிபிக் கடற்கரை வரையிலான நிலப்பரப்பு முழுவதையும் அமெரிக்கா ஆக்கிரமித்துக் கொண்டது. இன்றையப் புகழ்பெற்ற நியூ மெக்சிகோ, உடாநெவாடா, அரி சோனா, டெக்சாஸ் , கலிபோர்னியா, கொலராடா போன்றவை மெக்சிகோ நாட்டிலிருந்து ‘ரவுடித்தனம்’ செய்து அபகரிக்கப்பட்ட பகுதி களாகும். “ உலகை ஆட்சி செய்ய இயேசு எங்களுக்குக் கட்டளை யிட்டுள்ளார்” என்பதாகவே பல அமெரிக்க அதிபர்களும் உளறி யுள்ளனர். “ ஆதியில் உலகம் முழுவதுமே அமெரிக்காவாக இருந்தது”, எனச் சொல்லியிருக் கிறார் ஜான்லோக்கே என்பவர்.
அதேபோல 1898 இல் ஜனாதிபதி வில்லியம் மெகின்ஸே என்பவர், “ இறைவன் நம்மை உலக நாடுகளின் அறங்காவலராக நியமித்துள்ளார்” என்று கூறியுள்ளார். “ஈராக்கை அழிப்பது இயேசு எனக்கு இட்ட கட்டளை” என தற்போது புஷ் சொன்னாரே, நினைவிருக்கிறதா? இவரும், அவரும் மட்டுமல்ல, அத்துனை அமெரிக்க அதிபர்களுமே இப்படித் தான் உளறி வருகின்றனர். ஆண்டவன் பெயரைச் சொல்லி, அடிமை நாடுகளை இவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள்? இவர்களின் ஆதிக்க அருவெறுப்பு வளர்ந்தது எப்படி? பார்க்கலாம்!
விதி விலக்கு இல்லாத விசித்திரம் !
கூட்டிக் கழித்துப் பார்த்தால் அமெரிக்காவின் மொத்த வரலாறே அய்நூறு ஆண்டுகள்தான். பல்லாயிரம் ஆண்டுகள் தொன் மை வாய்ந்த பலப்பல வரலாற்று இனங்களை அழித்தொழித்தது இந்த அய்நூறு ஆண்டுகளில்தான்! இன்றைக்கு உலகம் முழுக்க உச்சரிக்கப்படும் வாசிங்டன் பகுதி, 1789 இல் அமெரிக்க முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக வைக்கப் பட்ட பெயராகும். இவர் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர். எப்படித் தெரி யுமா? செவ்விந்தியர்களிடமிருந்து கொள்ளையடித்துச் சேர்த்துக் கொண்டார். இவர் மட்டுமல்ல. . . தாமஸ் ஜெபர்சன், மாடிசன், மன்ரோ, ஜான்குவின்சி, ஆடம்ஸ் போன்றோரும் கொள்ளையராக விளங்கிய ஜனாதிபதிகள். இவர் களையொட்டியே ஆன்ட்ரு ஜாக் சன், நிக்சன், கென்னடி, லிண்டன் ஜாக்சன், ஆபிரகாம் லிங்கன், ஜிம்ஸ் போல்க், ரீகன், எய்சன் ஹோவர், ட்ரூமன், பில்கிளிண்டன், ஜார்ஜ்புஷ் எனப் பதவி வகித்த அத்தனை பேருமே உலகக் கொள்ளையர்கள்தாம்! விதி விலக்கு இல்லாத விசித்திரம் அமெரிக்க வரலாற்றுக்கு மட்டு மே உண்டு. கொள்ளை என்றால் ஏதோ ஒருவரிடம் இருக்கும் பொரு ளைத் திருடிவிட்டு ஓடிவிடுவ தல்ல. அது சாதாரணப் பாணி! அமெரிக்க பாணி முற்றிலும் வேறானது. ஒரு நாட்டிற்குள் புகுவது, அந்நாட்டு மக்களைக் கொண்டே அந்நாட்டு வளங் களைக் கொள்ளையடிப்பது, எதிர்ப்ப வர்களை ஒடுக்கி அடக்குவது, அதிகபட்சமாக கொலை செய் வது, அரசாங்கம் எதிர்ப்பானால் ஆட்சி மாற்றம் செய்வது, பிரதமர், அதிபர்களைப் படுகொலை செய் வது, இவ்வளவிற்குப் பிறகும் அங்கேயே சுதந்திரமாக உலா வருவது எனப் படுபயங்கரமான முதல்தரக் கொள்ளையர்கள். சாதாரண வார்த்தைகளில் சொல்வ தானால் “திருடர்கள்”!
அமெரிக்கத் தீவிரவாத அமைப்பு:அமெரிக்காவில் ஒரு தீவிர வாத அமைப்பு இருக்கிறது. அதற்கு சி.அய்.ஏ என்று பெயர் (ஊஐய - உநவேசயட iவேநடடபைநnஉந யபநnஉல) இது 1947 இல் அந்நாட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது. உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத் திருக்க, உலகம் முழுவதையும் கொள்ளையடிக்க, கொலை செய்ய, வன்முறைகளைத் தூண்டிவிட அமெரிக்காவின் அங்கீகரிக்கப் பட்ட நிறுவனமே இந்த சி.அய்.ஏ. உலகமே நிம்மதியற்றுக் கிடப்ப தற்கு இந்த சி.அய்.ஏ. தான் காரணம் என்றால் அது சற்றும் மிகையல்ல. இதன் செயல்பாடு களைப் படிக்கும் போதே நமக்குக் குருதி உறைந்து போகிறது. அப்படியிருக்க, இதனால் பாதிக்கப் படுவோர் குறித்து நம்மால் உணரவே முடியாது. இந்த அமைப்பிற்கு 1949 இல் அமெரிக்கா சுய அதிகாரம் வழங்கியது. அப்போது அதற்குரிய நிதியாக 42 இலட்சம் டாலர் வழங்கப்பட்டது. மூன்றே ஆண்டுகளில், அதாவது 1952 இல் 8கோடியே 20 இலட்சம் டாலர் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த அமைப்பின் வீரியத்தை அறிய, இந்த நிதி ஒதுக்கீடே நமக்கு உதவும்.