Wednesday, October 20, 2010

தீவிரவாதத்தை ஒழிக்கப் போராடும் இந்து, இசுலாம், கிறிஸ்துவம்!


இந்தியாவில் பல்வேறு மா நிலங்களிலும் தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்று வரு கின்றன. மனிதநேயத்தையும் அமைதியையும் விரும்பும் யாரா லும் இதைச் சகித்துக் கொள்ள முடியாது.
ஆனால் கூட்டத்தில் திருடி விட்டு, திருடன் திருடன் என எல்லோரும் கத்தும் போது, திருடனும் சேர்ந்து கத்துவானே அதுபோல இருக்கிறது பா.ஜ.க கதை.
எல்.கே.அத்வானி தொடங்கி, அடிமட்டத் தொண்டன் வரை வன்முறைக்கு எதிராகப் பேசுவது நமக்குப் புல்லரிக்கிறது.
இதன் உச்சக்கட்டமாக திருச்சி யில் ஒரு ஆர்ப்பாட்டத்தை பா.ஜ.க செய்துள்ளது. அதாவது இந்தியா வில் தொடர் தாக்குதலைக் கண்டித்து தீவிரவாதியின் உருவப் பொம்மையைச் செருப்பால் அடித்துள்ளார்கள்.
இன்று நடக்கும் குண்டு வெடிப்புகள் எல்லாமே “மறு விளைவு” என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அங்கொன் றும் இங்கொன்றுமாக குண்டுகள் வெடித்து சிலர் இறக்கும் போது பத்திரிகைகள் கூட படபடத்துப் போகின்றன. தீவிரவாதம் தான் தலைப்புச் செய்தியாக வெளிவரு கிறது. உள்பக்கச் செய்திக் கட்டு ரைகள் முழுவதும் இதுபற்றியே பேசுகின்றன. இதுவரை நடந்த குண்டுவெடிப்புகள் என ஆண் டு, மாதம், தேதி வாரியாக அட்ட வணையும் வெளியிடுகின்றன. ஒரு நாவல் எழுதுவ தைப் போல சுவரா°யமாக, திகிலாக செய்தி வெளியிடுகின்றன.இருக்கட்டும், இப்படித்தான் எழுத வேண்டும். ஒரு வன்முறையை மக்களிடம் இப்படித்தான் படம் பிடித்துக் காட்ட வேண்டும். பல்வேறு புகைப்படங்களையும் வெளி யிட்டு வன்முறைக்கு எதிராக மக்களை இப்படித்தான் திரட்ட வேண்டும்.எல்லாம் சரிதான்! ஆனால் இதில் வேறு என்ன கோளாறு?
இசுலாமியத் தீவிரவாதிகள் குண்டு வைத்து 20 பேர் இறந்து விட்டால் படபடக்கும் பத்திரி கைகள், இந்துத் தீவிரவாதிகள் குண்டு வைத்து 2000 பேர் இறந் தால் மவுனம் காக்கிறதே? எங்கே போனது இந்தப் படபடப்பு?
எங்கே போனது தலைப்புச் செய்தி? எங்கே போனது செய்திக் கட்டுரை மற்றும் அட்டவணைகள்?
மசூதியை இடிப்போம், இசு லாமியர்களை வெறிகொண்டு தாக்குவோம், கொலை செய் வோம், வன்முறை செய்வோம் என ஒன்றன் பின் ஒன்றாக இந்துத் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்கு தல் தொடுத்து வருகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்த வரை ‘தீவிரவாதம்’ என்பதைத் தங்களின் கட்சிக் கொள்கையாக வே பா.ஜ.க மற்றும் அதன் சார்பு அமைப்புகள் வைத்துள்ளன. அப்படியிருக்கும் போது இந்தத் தீவிரவாதக் குழுக்களையும் அம்பலப்படுத்த வேண்டியது பத்திரிகைகள் கடமையல்லவா?
அந்தப் பக்கம் வன்முறை நடந்து ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். அதிலிருக்கும் சிலர் எதிர்த் தாக்குதல் நடத்தி, இந்தப் பக்கம் சிலர் இறக் கின்றனர். ஆயிரக்கணக்கானோர் இறந்தபோது அமைதி காத்து விட்டு, இப்போது மட்டும் புலம்புவதில் என்ன பயன்?
இரண்டையும் ஒரு சேர கண்டித்தால் தானே அது மனிதத் தன்மை! இல்லாவிட்டால் அதற்குப் பெயர் மதத் தன்மையாயிற்றே.
இந்துத் தீவிரவாதியையும், இசுலாமியத் தீவிரவாதியையும் ஒரு சேர வெறுப்பதுதானே நேர் மையின் அழகு.
இசுலாமியர் வெட்டப்படும் போது எனக்கு அக்கறையில்லை என்று இருந்தால், பின்னாளில் நமக்கொரு பாதிப்பு வரும்போது, அது எப்படிப் பொது நலமாகும்?
குஜராத்தில் மரங்களைப் போல மனிதனை வெட்டினார் கள். வைக்கோல் போரைப் போல ஒன்று சேர்த்துக் கொளுத்தி னார்கள். அப்போதெல்லாம் பத்திரிகைகளும், மற்றவர்களும் என்ன செய்தார்கள்?
சக மனிதனின் கோர மரணத் தைப் பற்றிக் கவலைப்படவில் லையே? பா.ஜ.கவுக்கு எதிராகப் புரட்சி வெடிக்கவில்லையே? இன் றைக்குத் தீவிரவாதப் பொம்மை யைச் செருப்பால் அடித்து நாடகம் ஆடுகிறார்களே, அப்படிக்கூடச் செய்யவில்லையே?
பார்ப்பனர்களுக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்பட்டுவிடக்கூடாது என மாபெரும் மனித நேய இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். அந்த வகையில் நாம் மனிதநேயத்தை மூச்சுக்காற்றாய் நேசிக்கிறோம்.
இதற்கு எதிராக யார் செயற் பட்டாலும் அவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டியது நம் கடமை. அப்படியின்றி தீவிரவாதம், வன் முறைக் கண்ணோட்டத்தில் பார பட்சமாக இச்சமூகம் நடந்து கொண்டால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நாமும் உயிர் கொடுக்க வேண்டியிருக்கும்.
உலகில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென வாய் கிழியப் பேசுகிறது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவால்தான் உலகில் தீவிரவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென வாய் கிழியப் பேசுகிறது பா.ஜ.க. ஆனால் இவர்களால்தான் இந்தியாவில் தீவிரவாதம் தினம் தினம் உயிர் பெற்று வருகிறது.
ஆக இந்து மற்றும் இசுலா மியத் தீவிரவாதத்தை ஒழிக்க இங்கு பொதுவான, தூய மனிதர் கள்தான் தேவை. அப்படி நாம் இருப்போம்.

வி.சி.வில்வம்

No comments:

Post a Comment