Wednesday, August 19, 2015

முகநூல் பதிவுகள்:

 • தவறான தமிழ்த் தேசியம் பேசுபவராக சீமான் மாறிப் போனார். அவரின் தொண்டர்கள் முகநூலில் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். பெரியாரிஸ்டுகளும் அவ்வாறே திரும்பப் பேசுகிறார்கள். பொதுஜனம் இருவரையும் தரக்குறைவாய் நினைக்கக் கூடும். கொள்கையைப் பேசும் போது நிதானம் தேவை என்றவர் பெரியார்.
 
 
 
 • மதங்களை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால், உங்கள் சோற்றில் மண் அள்ளிப் போட்டது போல துடிக்கிறீர்கள். ரம்ஜான் அன்று 115 இஸ்லாமியர்களை, ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய அமைப்பே கொன்றுள்ளது. இதன் பிறகும் நீங்கள் ஒரு முடிவுக்கு வராவிட்டால், உங்கள் மதங்களே ஜெயிக்கட்டும். மனித இனம் அழியட்டும்.
 
 
 
 • உங்களால் முடியாத எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதுங்கள்.பின்னர் கிழித்து விடுங்கள் அல்லது புதைத்து விடுங்கள். இனி உங்களால் எல்லாம் முடியும்.
 
 
 
 • ''உடமைகள் காணாமல் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல'' - மருத்துவமனைகளில் அறிவிப்பு.
உயிரோடு வரும் மனிதர்களே, உங்களிடம் காணாமல் போகிறார்கள். நாங்க ஏதாவது கேட்டோமா?
 
 
 
 • எண்ணற்ற அப்பாவி மக்களை இந்து மதம் கொலை செய்கிறது. அதை இஸ்லாம் கண்டிக்கிறது. இஸ்லாம் செய்யும் கொலைகளைக் கிறிஸ்துவம் கண்டிக்கிறது. அதேபோல கிறிஸ்துவம் செய்யும் கொலைகளை இஸ்லாம் கண்டிக்கிறது. ஆக எல்லா மதங்களும் கொலை செய்கின்றன. கொலை செய்யும் இப்படியான மதங்கள் எதற்கு?' என நாம் கேட்டால், மூன்று பேரும் ஒன்றாய் சேர்ந்து கொண்டு, ''எல்லா மதங்களும் மக்களுக்கு அன்பையே போதிக்கின்றன'', என்கிறார்கள். உங்ககிட்ட போயி இந்த உலகம் மாட்டிக்கிருச்சே என்பது தான் எங்களின் பெருங் கவலை!
 
 
 
 • 3000 பள்ளிகளை மூடிய இராஜாஜி தமிழ்நாட்டில் வசித்தவர். 3000 பள்ளிகளைத் திறந்த காமராஜர் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர். பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா!
 
 
 
 • ''சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இந்துக்கள் கிடையாது'' - சுப்பிரமணிய சாமி.
நல்லா சொல்லுங்க சாமி... நாங்க சொன்னா எங்க பயல்களுக்கு உறைக்காது.
 
  
 
 • கிறிஸ்தவர்கள் வேண்டாம் என்று சொல்கிற ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடிகள் அவர்கள் கண்டுபிடித்த ட்விட்டர், பேஸ்புக்கில் இருந்து உடனே வெளியேற வேண்டும்.
   
   
   
  • ''திருந்தவில்லை பாகிஸ்தான்'' - தினமலர் செய்தி.
  அதைத் திருந்தாத தினமலர் சொல்லக் கூடாது.
   
   
  • முதுகுக்குப் பின்னால் ஒரே காரியம் தான் செய்ய வேண்டும் நண்பர்களே!
  அது முதுகைத் தட்டிக் கொடுப்பதாய் இருக்க வேண்டும்!
   
   
   
  • திருச்சியில் இரயில்கள் குறித்துத் தகவல் கூற, தமிழ்த் தெரியாத ஒரு இந்திக்காரர் பணியில் உள்ளார். நாம் ஏதாவது கேட்டால், நேலாவது பிளேட்பாம், ரெண்டுது பிளேட்பாம், மருரை இரயி இப்ப போம் என நம்மை ரொம்பப் படுத்துறார். நாம என்ன சொல்றோம், ''வட இந்தியாவில் இந்தி தெரியாத ஒரு தமிழனை வேலைக்கு வைக்காதீர். அது மாதிரிதான்டா இங்கயும்...
   
   
   
  • வாழ்வின் முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் பிறக்கவில்லை. இன்னொருவர் இறந்துவிட்டார்.
   
   
   
  • தமிழ்த் தேசியம் பேசும் நண்பர்களுக்கு:
  இந்தியாவின் நீதித்துறை, நிருவாகத் துறை, பத்திரிகைத் துறை என எல்லாமும் பார்ப்பனர்களிடம் உள்ளது. நீங்கள் சொல்வதைப் போல பிற மாநில மனிதர்கள், தமிழ்நாட்டின் அதிகாரத்தில் உள்ளனர். அதைத் தடுக்க நாங்களும் உங்களுடன் இணைந்து வருகிறோம். இந்தியாவின் பிற மாநில மக்களின் ஆதிக்கத்தையே ஒழிக்க முற்படும்போது, இந்தியாவுக்கே தொடர்பில்லாத வேறு நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்களை நீங்கள் ஏன் விட்டு வைக்கிறீர்கள்? பார்ப்பனர்கள் என்பவர்கள் தமிழர்கள் இல்லை, இந்தியர்கள் இல்லை. அவர்கள் ஆரியர்கள், வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள், அவர்கள் தாய்மொழி சமஸ்கிருதம் என வரலாறு சொல்கிறது, பெருஞ்சித்திரனார் போன்ற தமிழறிஞர்களும் சொல்லிவிட்டனர். சமஸ்கிருதமே எங்கள் மொழி என பார்ப்பனர்களும் கூறுகின்றனர். நம் தமிழ் ஆட்சிமொழி, ஆலய மொழி, நிருவாக மொழி ஆகாமல் இருப்பதற்கு நம் ஆட்சியாளர்கள் ஒரு காரணம் என்றால், பார்ப்பனர்கள் பலவகையில் காரணமாக இருக்கிறார்கள். தமிழையும், தமிழர்களையும் பார்ப்பனர்கள் கால் தூசியளவு கூட மதிப்பதில்லை. ஆக தெலுங்கு, கன்னடம், மலையாளி, வடநாட்டார் நமக்கு ஒரு பகுதி ஆதிக்கவாதிகள் என்றால், முழு ஆதிக்கம் நிறைந்தவர்கள் பார்ப்பனர்களே. தமிழ்நாட்டிற்குள் மற்றவர்களைத் திட்டமிட்டு திணிப்பதிலும் அவர்களுக்குப் பெரும் பங்குண்டு. தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு யாரெல்லாம் பகைவர்கள் என நீங்கள் சொல்வது எல்லாம் சரியே. பகைவர்கள் பட்டியலில் பார்ப்பனர்களைச் சேர்க்காமல் போராடினால், நம்மால் நிச்சயம் ஜெயிக்க முடியாது.
   
   
   
  • சீனாவில் வசிக்கும் என் நண்பர், ''தமிழகத்தில் இருக்கும் வந்தேறியே வெளியே போ'', எனப் பதிவிடுகிறார். நீயும் வேறு நாட்டில் பிழைக்கிறாய். ''வந்தேறி தமிழனே வெளியேறு'', எனச் சீனாக்காரன் சொன்னால், உன் நிலைமை என்னாவது?
  ஈழத்தில் ஆபத்து ஏற்பட்ட போது, அய்ரோப்பிய நாடுகள் தான், நம் தமிழர்களை அரவணைத்துக் கொண்டது. அவர்களும், ''வந்தேறி தமிழனே வெளியே போ'', என்றால் அவர்கள் நிலைமை என்னவாவது?
  உண்மையில் தமிழ்நாட்டில் வந்தேறிகளை விரட்ட வேண்டுமெனில், முதலில் பார்ப்பனர்களையே விரட்ட வேண்டும். ஆனால் ''கைபர் கணவாய் வழியாகத் திரும்பிப் போ'' என நாங்கள் சொல்வதில்லை. வந்தது வந்துட்ட... வாழ வழி கொடுத்த எங்கள் மக்களுக்குத் துரோகம் செய்யாதே என்றுதான் கேட்டுக் கொள்கிறோம். நாங்க நிதானமா சொல்றோம், கேக்க மாட்டேங்கிற. பார்ப்பான் தூண்டிவிட்டா குதிக்கிற.
   
   
  • பள்ளி மாணவி மது அருந்தியதை எப்படி சிந்திப்பது?
  1. இந்தியாவிற்கு அமெரிக்கக் கலாச்சாரம் தரமாக வந்து விட்டதையா?
  2. ''இவர் மாணவியாக இருக்கும் போதே மது அருந்துவார்'', என்ற விதியை எழுதிய கடவுளையா?
  3. நல்லது, கெட்டதை எடுத்துச் சொல்லாத சமூகத்தையா?
  4. இந்நிகழ்வில் இம் மாணவி இரண்டாம் குற்றவாளி. ஆக முதல் குற்றவாளி யார்?
   
   
  • ''பணம் செலுத்துமிடம்'' (cash counter) எனும் கண்ணாடிக் கூண்டை, மருத்துவமனை மற்றும் பள்ளிக் கூடங்களில் காணும் போது வயிறு எரிகிறது.
   
   
  • பிறர் வென்றால் கைதட்டு
  நீ வென்றால் கைகட்டு.
   
   
   
  • பகத்சிங்கிடம் தூக்கிலிடும் முன், ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டார்கள். "பேபி" கையால் ரொட்டி சாப்பிட வேண்டும் என்று கூறினார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண்மணி சிறையில் மலம் அள்ளுபவர். பகத்சிங் உறுதியாய் இருக்க, பேபி அழைத்து வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர். ரொட்டி தயார் செய்து தர மாட்டேன்", என பேபி கூறுகிறார். " என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுகிறவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள், தாயின் மேலானவர் என்கிறார் பகத்சிங். கம்யூனிசமும், பெரியாரியமும் இப்படியான இளைஞர்களைத்தான் தோற்றுவித்தது.
   
   
   
  • கடவுள் இல்லை என ஏதாவது ஒரு அர்ச்சகரிடம் சொல்லுங்கள்...
  ''இது ஒரு பெரிய கண்டுபிடிப்பா? எங்களுக்குத் தெரியாததை இவுக சொல்ல வந்துட்டாக...'' எனச் சலித்துக் கொள்வார்.
   
   
   
  • இங்க வாங்க! நீங்களும், நாங்களும் தனித்தனிக் கொள்கையைப் பேசிக்கிட்டு எவ்வளவு நாள்கள் இப்படியே இருப்பது? நாம ஒன்றாகச் சேரணும். அதுக்கு என்ன வழி, நீங்களே சொல்லுங்க?
   
   
   
  • பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்த வேண்டும் - உயர்நீதி மன்றம்
  பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசும் நடக்க வேண்டும்.