Wednesday, August 19, 2015

முகநூல் பதிவுகள்:


 
    
  • புதுக்கோட்டையில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு (70 கி.மீ) பாதயாத்திரைப் போவதை நேற்று பார்த்தேன். அதில் 10 வயது சிறுமி ஒருவர் நடக்க முடியாமல் அழுகிறார். அவரின் அம்மாவோ தரதரவென இழுத்துப் போகிறார். குழந்தைகள் அதிகம் நடக்கக் கூடாது என்பதற்காகவே 5 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளியை உருவாக்கினார் காமராசர். இந்தத் தாயோ, தன் மகளை 70 கிலோ மீட்டர் நடக்க வைத்து அழகு (?) பார்க்கிறார்.
 
 
 
  •  பெரியாரிஸ்டுகள் பார்ப்பன எதிரியா? பார்ப்பனீய எதிரியா? எனச் சிலர் கேட்கிறார்கள். பெரியார் பார்ப்பனக் கருத்துகளையே ஒழிக்க நினைத்தார், பார்ப்பனர்களை அல்ல. பின்னது நோக்கமாக இருந்திருந்தால், எப்பொழுதோ கதை முடிந்திருக்கும்.  
 
 
 
  • 'முஸ்லிம் என்றாலே தீவிரவாதி' என்பது தினமலர் கருத்து. ஆனால் அப்துல் கலாம் என்கிற முஸ்லிமுக்கு தனி மலர் தயாரித்து, அதில் விளம்பரம் வெளியிட்டு, ஒரேநாளில் இலட்சக்கணக்கில் பணம் பார்த்து விட்டார்கள்.
'பார்ப்பானைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்' எனப் பெரியார் சும்மாவா சொன்னார்.
 
 
 
''எல்லோரும்
சொல்கிறார்கள்''
என்பது
ஒரு
அழகான பொய்!
 
 
 
  • இந்தியாவில் உள்ள அனைவரும் அவரவர் மாநிலத்திற்குச் சென்று விடுங்கள், அவரவர் தாய்மொழியைப் பயன்படுத்துங்கள் என்றால்...
தமிழர்கள் - தமிழ்நாடு, தமிழ்.
மலையாளிகள் - கேரளா, மலையாளம்.
தெலுங்கர்கள் - ஆந்திரா, தெலுங்கு.
மராத்தியர்கள் - மும்பை, மராத்தி.
குஜராத்திகள் - குஜராத், குஜராத்தி.

பிராமணர்கள் - ? ?
 
 
 
  • எங்கள் வீட்டிற்கு மூன்று இளைஞர்கள் வந்து, கோவிலுக்கு நன்கொடைக் கேட்டனர். ''நான் சாமியை நம்பமாட்டேன். ஆனால் உங்களை நம்பி ரூ 100 தருகிறேன். உங்கள் செலவுக்கு ஆகட்டும்'', என்றேன். தேவையில்லை என்றனர் கோபமாக!
உங்களுக்கே உங்கள் சுயமரியாதை முக்கியம் எனில், எனக்கு என் சுயமரியாதை எவ்வளவு முக்கியம்!
 
 
 
  • சிலர், நிமிர்ந்து சென்றால் நேரம் செலவாகுமே எனக் குனிந்து செல்கிறார்கள்.
 
 
 
  • ''வந்தேறியே வெளியே போ'', எனச் சில அமைப்புகள் சொல்வதைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் அதை ஏன் பார்ப்பனர்கள் வீட்டு அடுப்படியில் இருந்து சொல்கிறார்கள் என்பது தான் புரியவில்லை!
 
 
 
  • ''பெரியார் எங்களின் எதிரி'', என நாம் தமிழர்கள் சொல்கிறார்கள். பரவாயில்லை, இருக்கட்டும்.
ஆனால் ''பார்ப்பனர்கள் எங்கள் நண்பர்கள்'' என்கிறார்களே! அதைத்தான் கடுகளவும் ஜீரணிக்க முடியவில்லை.
 
 
  •  ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற போது அவர்கள் அலறினார்கள். அவர்கள் வீட்டில் காதல் திருமணம் நடந்த போது அமைதியானார்கள்.
விதவை மறுமணம் வேண்டும் என்ற போது அவர்கள் அலறினார்கள். அவர்கள் வீட்டில் அப்படி ஒன்று நடந்த போது அமைதியானார்கள்.
இப்படி அலறுவதும், அமைதியாவதுமாக தமிழர்கள்!
 
 

  • சண்டைக்கு இருவர் தேவை. அதில் ஒருவராய் நீங்கள் இருக்காதீர்கள்.புதியதோர் வாழ்வு செய்வோம்!
 
 
 
  • சென்ற வார எனது பேருந்துப் பயணத்தில், அருகில் இருந்தவர் கைப்பேசியில் சத்தமாகப் பேசினார். 'ஏன் இவ்வளவு சத்தம்?' என்ற கேள்வியோடும், எரிச்சலோடும் பயணித்தேன். இன்று என் நண்பனோடு பேருந்தில் போனேன். எனக்கொரு அழைப்பு வர, பேசியபடி வந்தேன். கைப்பேசியை வைத்ததும், நண்பன் சொன்னான், ''பொது இடத்தில் சத்தமாகப் பேசாதே, அடக்கி வாசி'', என்றான். நான் எதுவும் கூறவில்லை. மன்னிப்பு மட்டும் கேட்டுக் கொண்டேன்.
 
 
 
  • பெரியாருக்கும், எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் முப்பாட்டன் ஒரு மருத்துவர், என் பாட்டன் ஒரு வழக்கறிஞர், என் தாத்தா ஒரு பொறியாளர். நாங்கள் எவருக்கும் அடிமையாய் வாழ்ந்ததில்லை. எங்களுக்குச் சுயமரியாதையைப் பெற்றுத் தந்தவர்கள் ஆரியர்கள். எங்களின் கல்விச் செலவுகளைப் பிராமணக் கல்வி அறக்கட்டளையே ஏற்றது. நாங்கள் மட்டுமல்ல, எங்கள் தமிழினமே 2000 ஆண்டுகளாக இப்படித்தான் சிறப்போடு வாழ்ந்தது. எனவே எங்களுக்கும், பெரியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
 
 
 
  • தன்னுடன் போட்டி போட்டு, வேகமாக ஓடி வெற்றி பெற குதிரைகள் இருப்பதால் தான், ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது.
வாழ்வில் எல்லா நண்பர்களும் வெற்றி பெற என் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment