Tuesday, February 19, 2013

ஆங்கிலத்தைக் காட்டிப் பயமுறுத்துகிறாய்?

உலகின் அனைத்து நாடுகளிலும்
தமிழன் வசிக்கிறான்.

சைனாவில் சைனிஷ் பேசுகிறான்
கியூபாவில் ஸ்பானிஷ் பேசுகிறான்
அரபு நாடுகளில் அரபிக் பேசுகிறான்
ரஷ்யாவில் ரசியன் பேசுகிறான்
ஜப்பானில் ஜப்பானிஷ் பேசுகிறான்
ஜெர்மனில் ஜெர்மன் பேசுகிறான்
மலேசியாவில் மலாய் பேசுகிறான்
கொரியாவில் கொரியன் பேசுகிறான்
பிரான்சில் பிரெஞ்ச் பேசுகிறான்
இத்தாலியில் இத்தாலியன் பேசுகிறான்
தாய்லாந்தில் தாய் பேசுகிறான்
பர்மாவில் பர்மீஸ் பேசுகிறான்
எதோப்பியாவில் ஏரோமா பேசுகிறான்
பெல்ஜியத்தில் டச் பேசுகிறான்
கம்போடியாவில் கீமர் பேசுகிறான்
தென்னாப்பிரிக்காவில் சுளு பேசுகிறான்
கானாவில் அகான் பேசுகிறான்
சோமாலியாவில் சோமாலி பேசுகிறான்
நைஜீரியாவில் லிக்போ பேசுகிறான்

உலகில் 250 க்கும் மேற்பட்ட நாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் அதிகபட்சம் 20 நாடுகளில் வேண்டுமானால் ஆங்கிலம் பேசப்படுகிறது. மற்ற அனைத்து நாடுகளிலும் மொழிகள் வேறு. ஆனால் தமிழ்நாட்டில் என்ன சொல்கிறான்? ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் எங்குமே போக முடியாது என்கிறான். ஆங்கிலத்தை ஏன் பெரிதாகக் காட்டி, காட்டிப் பயமுறுத்துகிறாய்? நீ பயமுறுத்துவதால் தான் குழந்தைகளும் பயப்படுகிறது. ஆங்கிலம் படிப்பதால் பல நன்மைகள் இருப்பதும், நம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை ஒரு நோக்கமாக நாம் வைத்திருப்பதும் வேறு விசயம். நீ பயமுறுத்துவதும், அம்மொழி மீது அநியாயத்திற்கு கவுரவத்தை ஏற்றி வைப்பதும் ஏனென்றுதான் புரியவில்லை?

பிப்ரவரி 21 - உலகத் தாய் மொழி தினம்.

No comments:

Post a Comment