Tuesday, January 12, 2016

முகநூல் பதிவுகள்!  





மக்கள் எதற்கும் கவலைப்படக் கூடாது - ஜெயலலிதா வேண்டுகோள்.
சரிங்க! நாங்க ஜாலியா இருக்கோம்.
 
 334 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 16 shares
 
 
 
 மழை பாதிப்பால் மக்கள் நிற்பது தெருக் கோடி.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இன்றைய கும்பாபிசேக செலவு 30 கோடி.
 
 252 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 37 shares
 
 
 
பிரான்ஸ் நாட்டு இராணுவம் பிற நாட்டு மக்களைத் துப்பாக்கியால் சுடுகிறது. அவர்கள் பிரான்சுக்கு வந்து சுடுகிறார்கள்.
இரண்டு பேரும் திருந்துங்கடா!
 
 146 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 4 shares
 
 
 
சீமான் தன் கட்சியை, இவ்வளவு முழு நீள நகைச்சுவைச் சித்திரமாக எடுக்கக் கூடாது.
 
 237 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 2 shares
 
 
 
இயற்கைக்கு நாம் செய்த பெரும் பிழை...
இடியாய் விழுகிறது நம் மீது மழை!!
 
160 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது. 1 பகிர்வு
 
 
 
திருவாரூரில் குடும்பத்துடன் ஆட்டோவில் போனேன். கட்டணம் ரூபாய் 100 கேட்பார் என நினைத்தேன். ஆனால் 70 தான் கேட்டார். திரும்பும் போது வேறொரு ஆட்டோகாரர், 60 ரூபாய் மட்டுமே கேட்டார். பரவாயில்லையே, திருவாரூர் நல்ல ஊராக இருக்கிறதே என நினைத்தேன். ஆக, ஒரு ஊருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க இரண்டு பேர் போதும்!
 
 212 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
பிரபாகரன் அவர்களே! உங்கள் நிலை எனக்குத் தெரியாது. ஆனால் இதற்குக் காரணமான இந்தியத் தேசியத்திற்கும், பார்ப்பனீய மோசடிக்கும் ஒருபோதும் நாங்கள் துணை போக மாட்டோம். உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்!
 
 151 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 1 பகிர்வு
 
 
 
உங்கள் மீது ஒருவர் கல் எறிந்தால், அவர் மீது நீங்கள் பூவை வீசுங்கள். மீண்டும் அவர் கல் எறிந்தால், அவர் மீது பூத்தொட்டியை வீசுங்கள். கொய்யால சாகட்டும்!
(இது ஓர் சகிப்புத் தன்மையற்ற பதிவு)
 
 208 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.  11 shares
 
 
 
தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் - ரஜினி
எங்களுக்கு எதுவும் வேண்டாம் ரஜினி! வழக்கம் போல நீங்கள் அடுத்த படம் எடுங்கள். நாங்கள் பிச்சை போடுகிறோம்!
 
 411 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 58 shares
 
 
 
மழை பெய்யத் தொடங்கிய முதல் நாள், "வருண பகவான் கருணையால் சென்னையில் மழை", எனத் தினமலர் செய்தி வெளியிட்டது. இப்போதைய சூழலில் அந்த வருண பகவான் கிடைத்தால், சென்னை மக்கள் மிதித்தே கொல்லுவார்கள்.
 
 229 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.  24 shares
 
 
 
( நாம் யாரையும் குறிப்பிட்டுப் பேச விரும்பவில்லை. எனினும் இப்போது நாம் அறியாமல் போனால், இறப்புக்குப் பின் நமக்குத் தெரியாமலே போகும் )
நுங்கம்பாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வியாசர்பாடி ஏரி, முகப்பேர் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி, ஆவடி ஏரி, கொளத்தூர் ஏரி, இரட்டை ஏரி, வேளச்சேரி ஏரி, பெரும்பாக்கம் ஏரி, பெருங்களத்தூர் ஏரி, மாம்பழம் ஏரி, வில்லிவாக்கம் ஏரி, பாடியநல்லூர் ஏரி, விச்சூர் ஏரி, வேம்பாக்கம் ஏரி, பிச்சாட்டூர் ஏரி, திருநின்றவூர் ஏரி, பாக்கம் ஏரி, முடிச்சூர் ஏரி, சேத்துப்பாடு ஏரி, செம்பாக்கம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, அல்லிக்குளம் ஏரி, கோடம்பாக்கம் டேங்க் ஏரி, ஓமந்தூரார் குளம், வள்ளுவர் கோட்டம் குளம், சென்னை நீதிமன்றக் குளங்கள், ஆலப்பாக்கம் ஏரி, வேப்பேரி, விருகம்பாக்கம் ஏரி, கோயம்பேடு சுழல் ஏரி, கொரட்டூர் ஏரி, தியாகராயர் நகர் ஏரி, உள்ளகரம் ஏரி, தலக்காஞ்சேரி, பல்லாவரம் பெரிய ஏரி, பீர்க்கங்கரணை ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, கோலடி ஏரி, வளசரவாக்கம் ஏரி, பாவேரிப்பட்டு ஏரி, மதுராவயல் ஏரி, செந்நீர்குப்பம் ஏரி ஆகிய இவையனைத்தும் சென்னையில் காணாமல் போன ஏரிகள்.
1906 ஆம் ஆண்டின் படி, சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் இருந்ததாகவும், தற்போது 43 நீர்நிலைகள் மட்டுமே உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் 96 விழுக்காடு நீர்நிலைகள் அழிந்துவிட்டதாம்.
இது சென்னையில் மட்டும். இதுதவிர தமிழகம் முழுக்கக் கணக்கிட்டால், நம் சாவு நம் கையில்!
 
 196 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 122 shares
 
 
 
கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொருள்கள் வழங்கிய போது, 2 போலிஸ் வந்து, 'எங்களுக்கும் வேண்டும்' என்றார்கள்.
வானம் கெட்ட கடலூரில், மானம் கெட்டதுகள்.
 
 241 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 11 shares
 
 
 
 
வெள்ளம் பாதித்த மக்களுக்கு கிரிக்கெட் வெற்றி சமர்ப்பனம் - தினமலர்
ஏன்டா! நீங்க திருந்தவே மாட்டிங்களா? எதை, எதுக்குடா சமர்ப்பனம் செய்றீங்க?
 
 206 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 7 shares
 
 
 
 
ஜப்பான் முழுமதி அறக்கட்டளை நண்பர்களுக்கு வணக்கம்!
உலகம் முழுவதும் சிறப்பாக இயங்குகிற தமிழர் அமைப்புகள் உண்டு. ஆனால் ஜப்பானில் அப்படி இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. அது 2000 - 2003.
காலங்கள் கடந்த நிலையில் நீங்கள் அனைவரும், பிற நாட்டுத் தமிழர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். ஜப்பான் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கான உங்களின் உழைப்பு உன்னதமானது. முழுமதியின் குறிக்கோள்கள் அதனை தெளிவாக உணர்த்துகின்றன. தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள், தோழமை சந்திப்புகள், குழந்தைகள் மீதான கவனம் என உங்களின் ஒவ்வொன்றும் சிறப்பு!
தமிழீழம் துன்புற்ற நேரத்தில், தைரியமான, நேர்த்தியான செயல்களால் ஜப்பான் உங்களை நிமிர்ந்து பார்த்தது; இந்தியா குனிந்து நின்றது. உங்களுக்கான அடையாளங்கள் வலுப்பெற்ற சிறந்த தருணம் அது. அதேபோல தமிழ்நாட்டிலும் உங்கள் தடயங்களும் ஆழமாகவே பதிவாகின்றன. உங்களின் சமூக உதவிகள் ஒருபுறம் இருந்தாலும், அதைச் செய்யும் முறை கண்டு நான் அசந்து போகிறேன். அப்படி ஒரு வரையறை! அப்படி ஒரு நேர்த்தி!
உங்கள் அமைப்பின் தேர்ந்த கட்டமைப்பிற்கு, மேலும் ஒரு உதாரணம் வெள்ள நிவாரணம்! ''சென்னை, கடலூரில் நடப்பது என்ன?'', எனக் கடைக்கோடித் தமிழன் முழுமையாய் அறியும் முன்னே, முழுமதி குழு அமைத்துவிட்டது. உலகம் முழுக்க உதவிய தமிழர்கள் போலவே நீங்களும் செய்தீர்கள்.
எனினும் எனது எழுத்துகள் குறிப்பிட விரும்புவது "உங்களின் தனித்தன்மை!" தமிழ்நாட்டின் ஏதோ ஒரு அமைப்பிற்கு நீங்கள் பணம் அனுப்பி, நாங்களும் வெள்ள நிவாரணம் கொடுத்தோம் என, மெல்ல நகர்ந்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை நீங்கள்.
குழு அமைத்தது, மக்களுக்கு உதவிகள் செய்ய மக்களிடமே நன்கொடை திரட்டியது, அதை நிருவாகம் செய்ய பொறுப்பாளர்கள் நியமித்தது, தமிழ்நாட்டில் ஒரே இடத்தில் இல்லாமல் பல ஊர்களில் மய்யம் அமைத்தது, அதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர், சில களப்பணியாளர்கள், ஏதோ பாதிக்கப்பட்ட இடங்களில் உதவி செய்யுங்கள் என்று கூறாமல், அதையும் ஜப்பானில் இருந்து இடங்களைத் தேர்வு செய்தது, வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் தன்னார்வக் குழுக்களை அமைத்தது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகச் சரியாகப் போனதா எனக் கவலைப்பட்டது, மேலும் எங்குப் பாதிப்புகள்? வேறு என்ன உதவிகள் வேண்டும்? எனத் தொடர்ந்து உடல் இரத்தம் போல இயங்கியது, அதற்கென வாட்ஸ் அப்பில் "கடலூருக்கு உதவுவோம்" எனத் தனி வட்டம் தொடங்கியது, பின்னர் தமிழகத்தில் உதவிகள் போன ஊர்களின் பெயரில் தனி வட்டம் தொடங்கியது என ஒரு அரசு அமைப்பே தோற்றுப் போகும் வண்ணம் நீங்கள் செய்தீர்கள். அதுவும் விரைந்து செய்து, வியக்க வைத்தீர்கள்.
தமிழக நிருவாகத்தை நாம் அறிவோம். ஆனால் ஜப்பானில் இருந்து நீங்கள் செய்து வரும் நிருவாகம் ஒரு படிப்பினை! ஒரு பெருமிதம்! நீங்கள் தொடர வேண்டும்! அந்த ஆசையில் தான் உங்களில் ஊடுருவி, ஒவ்வொன்றையும் எழுத முயற்சிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் கைப்பிடித்தும் நான் நன்றி கூறுவேன்.
நன்றி தமிழர்கள்!
நன்றி முழுமதி!
நன்றி ஜப்பான்!
- வி.சி.வில்வம்
 
 118 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 7 shares
 
 
 
நான்கு நாட்கள் வேலையாகக் கேரளா செல்கிறேன். வந்த பிறகு என்னை யாரும் வந்தேறி எனச் சொல்லக் கூடாது.
ஆனால் அங்கு நிறைய "மாட்டுக்கறி" சாப்பிடுவேன். வேண்டுமானால் என்னை "இந்து இல்லை" எனச் சொல்லுங்கள்!
 
 267 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
'அம்மா, அம்மா' என்று அழைப்பதால், என் பெயரே எனக்கு மறந்து விட்டது.
அப்படியா...? இதோ நான் நினைவுப்படுத்துகிறேன். உங்கள் பெயர் ஜெயலலிதா!
 
 289 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 14 shares
 

No comments:

Post a Comment