Friday, September 11, 2015

முகநூல் பதிவுகள்தொலைக்காட்சிப் பார்ப்பது பார்வைக்கு, சிந்தனைக்கு, உடலுக்குக் கேடு. எனவே ஒரு மாதத்திற்குக் கேபிள் இணைப்பைத் துண்டிக்கலாம் என, எங்களின் 9 வயது மகளுடன் ஓர் ஒப்பந்தம் செய்தோம். எனக்கான பொழுது போக்கு என்ன? எனக் கேட்டார் கியூபா. விளையாட்டுகள் அறிமுகம் செய்தோம், நாங்களும் சேர்ந்து விளையாடினோம், வெளியில் நிறைய சென்றோம். விளைவு, ஒரு மாத ஒப்பந்தம் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. குழந்தைகளை மதித்தும், கேட்டும் செய்தால் எல்லாம் சாத்தியமாகிறது.
 
 
 
தமிழக விவசாய மாநாட்டில் மோடி பங்கேற்பார்.
விவசாய ''ஒழிப்பு'' மாநாடு எனத் திருத்தி வாசிக்கவும்.
 
 
 
எப்பவும் பெரியார், அம்பேத்கர், பொதுவுடமைக் கொள்கைதானா.. வேறு எதுவும் தெரியாதா? என நண்பர் கேட்டார்.
மக்கள் ஒற்றுமை ஓங்கவும், வறுமை அகலவும் உங்கள் மதம், உங்கள் ஜாதி, உங்கள் ஆர்.எஸ்.எஸ், உங்கள் பி.ஜே.பி யார் போராடினாலும் அருகில் நிற்போம்.
 
 
 
 
இன்று என் நண்பரின் புது வீட்டை இடித்துக் கொண்டிருந்தனர். "வீடு கட்டி 6 மாதம் கூட ஆகவில்லை, ஏன் இடிக்கிறீர்கள்?" என அதிர்ச்சியாய் கேட்டேன். "வீட்டை இடிக்கவில்லை. வாஸ்து படி கழிவறையை மட்டும் மாற்றுகிறோம்," என்றார். நான் அவரிடம் எதுவும் கூறவில்லை. வண்டியில் வரும்போது நானாக நினைத்துக் கொண்டேன். கழிவறையை மாற்ற வாஸ்து என்கிறார்கள். பல பேருக்கு இங்கு மலச்சிக்கல் இருக்கிறதே.. அதைப் போக்க ஏதாவது வாஸ்து இருக்கிறதா? இப்படிப் பார்க்க இருந்தால் "வரும்" அல்லது அப்படிப் பார்க்க இருந்தால் "வரும்" என ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா வாஸ்து நிபுணர்களே?
 
 
 
ஆப்பிரிக்கக் கடவுள் கருப்பாகவும், வெள்ளையர் கடவுள் சிகப்பாகவும் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மனிதன் தான் கடவுளைப் படைத்தான் என்பதற்கான சான்று அது.
 
 
 
 
நாகரிக உடையணிந்து, ஒய்யார நடை போட (FASHION SHOW) அழைத்தார்கள். அங்கே எல்லோரும் ஆச்சர்யப்பட கதிர் அறுக்கப் போனார் கியூபா. நீ பரிசு கொடுக்கா விட்டாலும், என் நாகரிகம் இதுதான்டா நண்பா !
 
 
 
 
உன் வரலாறு அத்தனையும் தெரியும் எங்களுக்கு! சிவப்புத் தோல் விரித்தாய்; விழுந்தவனை அழித்தாய். மந்திரம் சொல்லி, மத மயக்கம் கொடுத்தாய். ஜாதி வலையில் சதி பின்னினாய். கடவுளென்ற கயமை கற்பித்தாய். நீ அழித்திடாத அழிவுகளே அரிது. சூழ்ச்சிதானே உன் சூத்திரம். எதுவும் தெரியாதென்று திரியாதே? உன் வரலாறு அத்தனையும் தெரியும் எங்களுக்கு! ஒன்றே ஒன்றுதான் புரியவில்லை. ஆறறிவு மக்களுக்கே கேடுகள் பல செய்துள்ளாயே... நீ மேய்த்தாயே ஆடு, மாடுகள்...அதற்கு எவ்வளவு கேடுகள் செய்திருப்பாய்?
 
 
 

இந்த சைவம் சாப்பிடுபவர்கள், "நாங்க சுத்த சைவம். எதுவும் படலையே... எதுவும் கலக்கலையே", என ரொம்பத்தான் பண்றாங்க... நாங்க கூடத்தான் சுத்த அசைவம். ஏதாவது பிகு பண்றோமா?
 
 
 
நிகழ்ச்சி ஒன்றிற்காக உறவினர் வீடு சென்றிருந்தேன். அவ்வீட்டின் பாட்டி திடீரென சாமி (?) வந்து ஆடினார். சிறிது நேரம் கழித்து, ''பாட்டி மலை ஏறிவிட்டதாக'' சொன்னார்கள்.
எனக்கென்னவோ பாட்டி பஸ் ஏறுவதே சிரமம், இதுல எப்படி மலை ஏறும்?
 
 
 
என்.எஸ்.கே இறந்து விட்டதாக அடிக்கடி செய்தி வருமாம். "நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்க. இவங்க திருப்திக்காகவே நான் ஒரு தரம் சாகணும்'', என்பாராம்.
கலைவாணரின் நினைவு நாள் இன்று (30.08.1957)
 
 
 
 
கூட்டங்களில் மணிக்கணக்கில் பேசிவிட்டு, இத்துடன் என் ''சிற்றுரையை'' முடித்துக் கொள்கிறேன் எனச் சிலர் சொல்லும் போது, உடம்பில் பிபி 200 காட்டுகிறது.
 
 
 
16 ஆண்டுகளுக்கு முன், ஜப்பானில் என்னுடன் பணிபுரிந்த ஜப்பானியர் கேட்டார். Where from you? I am from Tamilnadu. Oh.. Where is Tamilnadu? Near India.
உண்மையான தமிழ்த் தேசம் குறித்து நாங்கள் அறிவோம்.
 
 
 
மதவெறி பிடித்த மனிதர்கள் வீட்டில்,
இக் குழந்தையின் படம் இருக்க வேண்டும்!
 
 
 
கடவுளை மனிதரே செய்தார்.
இதோ செய்கிறார் பாருங்கள்!
 
 
 
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.
தமிழ்நாட்டை திமுக, அதிமுக - விடம் விட்டுக் கொடுத்தோம். கெட்டுப் போனோம்! இந்தியாவை காங்கிரஸ், பிஜேபி- யிடம் விட்டுக் கொடுத்தோம். கெட்டுப் போனோம்!
ஆக, கெட்டுப் போனவர்களிடம் விட்டுக் கொடுக்காதீர்கள்!
 
 
 
 
தமிழ்நாடு விலைக்கு வருகிறது. வாய்ப்பு உள்ளவர்கள் முதலீட்டாளர் மாநாட்டிற்கு வரவும்.
 
 
 
அன்புள்ள அமெரிக்க மக்களுக்கு...
ஒரே ஒருமுறை, ஒரே ஒரு கட்டிடத்தை இடித்ததற்கு 14 ஆண்டுகள் கடந்தும் நினைவு நாள் கொண்டாடுகிறீர்கள். உலகம் முழுக்க நீங்கள் இடித்த கட்டிடங்கள், அடித்த கொள்ளைகள், செய்த கொலைகள் கணக்கில் அடங்காது. உங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உச்சக்கட்ட வெறியோடு இருக்கிறீர்கள். உலகம் முழுவதையும் அழித்துவிட்டு, நீங்கள் மட்டும் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்?