Sunday, September 20, 2015

முகநூல் பதிவுகள் 
 
 
 
 
ஆர்.எஸ்.எஸ்.நோய்க்கான
ஒரே அறுவைச் சிகிச்சை
மருத்துவர்!
வில்வம் கியூபா இன் புகைப்படம்.
 
 
 
 
சில்லரைத் தட்டுப்பாடுகள் நிறைந்த நம் நாட்டில், பேருந்துக் கட்டணத்தை 11, 21, 31 என்றெல்லாம் நிர்ணயித்த அந்த அதிகாரிக்கு "அதி புத்திசாலி விருது" கொடுக்க வேண்டும்.
 
 
 
 
விநாயகர் சதுர்த்தி வருகிறது. எனக்குக் கூட பிள்ளையாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல ஆசைதான். ஆனால் அவர் நன்றி சொல்வாரா?
 
 
 
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
மரமானாலும் பழமுதிர்ச் சோலையில் மரமாவேன்
கல்லானாலும் திருத்தணி மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பயிராவேன்...
மண்ணாவேன், மரமாவேன், கல்லாவேன், புல்லாவேன்
எப்ப தம்பி மனுசன் ஆவீங்க?
 
 
 
பெரியார் - விநாயகர் இருவருக்கும் செப்டம்பர்-17 பிறந்த நாள். இந்த இருவரில் நாட்டுக்கும், மக்களுக்கும் பாடுபட்டவர் யார்? பலனை உண்டாக்கியவர் யார்?
 
 
 
 
மும்பைத் தாராவிப் பகுதிக்குக் காமராஜர் அவர்கள் பேசச் சென்றுள்ளார். அவர் பேசுவதற்கு முன் நாடார் மகாஜன சங்கம், ஆதி திராவிட மகாஜன சங்கம், தேவேந்திர சங்கம், நாயுடு சங்கம், முதலியார் சங்கம், விஸ்வகர்மா சங்கம் என வரிசையாக மாலை அணிவிக்க, காமராஜர் எரிச்சல் அடைந்து, "இந்த ஜாதிச் சனியன்களை சென்ட்ரல் ஸ்டேசனிலே மூட்டைக் கட்டி விட்டுறக்கணும்" என்றாராம். (நன்றி - தமிழ் லெமூரியா, மும்பை இதழ்)
 
 
 
வில்வம் கியூபா இன் புகைப்படம்.
 
 
 
ஜிம்முக்குப் போன 4 ஆவது நாளில் கையை முறுக்கிப் பார்ப்பதும், நடைப்பயிற்சி போன 8 ஆவது நாளில் தொப்பைக் குறைந்திருக்கா எனப் பார்ப்பதும் சின்னப் புள்ளைத்தனமா இல்லை. நான் என்னைச் சொன்னேன்.
 
 
 
பயப்படும் அளவு பிள்ளையார் செய்து, வீதி தோறும் விசில் அடித்து, மக்களை விரட்டியும், மிரட்டியும் ஊர்வலம் சென்று, பின்னர் தண்ணீரில் மூழ்கடித்து, தேவைப்பட்டால் கிரேனில் தூக்குமாட்டி, சில நேரங்களில் அடித்தும், உடைத்தும், தொப்பையில் ஏறி நின்றுமாக உங்கள் பக்தியை முடித்து விட்டீர்களா பக்தர்களே?
 
 
 




No comments:

Post a Comment