Monday, March 7, 2016

முகநூல் பதிவுகள்!





இந்து மதத்தை யாரும் பிரிக்க நினைக்காதீர்கள் - விஎச்பி வேதாந்தம்.

மன்னிக்கவும்! நாங்கள் பிரிக்க நினைக்கவில்லை. ஒழிக்க நினைக்கிறோம்!

 321 Like 16 shares

 
டேய்! ரேசன் கடைக்குப் போடா என்கிறார் அம்மா. போம்மா! வண்டி இல்லை, நடக்க முடியாது என்கிறார் மகன். பழனிக்கு 150 கி.மீட்டர் நடக்கத் தெரியுது. ரேசன் கடைக்கு போக வலிக்குது என்கிறார் அம்மா.

ஆத்திகம் பேசும் நாத்திகம் சுவையானது!

  246 Like 9 shares

 
இந்திய வளர்ச்சிக்கு இரு பெரும் தடைகள்:
1. சிவ மயம்
2. உலக மயம்
  
180 Like 5 shares

 
தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? எனச் சிலர் கேட்கிறார்கள்.
எப்போதும், ஏதாவது ஒரு கட்சி வெற்றி பெறுகிறது.

ஆனால் தமிழ்நாடு மட்டும் தொடர்ந்து தோல்வியில் இருக்கிறது!

 144 Like 1 shares

 
ஒரு பெண்ணை சந்தித்தேன். அவர் கணவருக்கு, ஜாதகப்படி 2 திருமணமாம். அப்பெண்ணே 2 ஆவது திருமணம் செய்து வைத்தாராம்.

ஜாதகப்படி பெண்களுக்கு 2 திருமணங்கள் உண்டா?

237 Like 12 shares


 கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, தன் மகளைச் சுட்டுக் கொள்ள வேண்டும் - ஹெச்.ராஜா

அதற்காக.... பாஜக தலைவர் ஹெச்.ராஜா, தன் மனைவியைச் சுட்டுக் கொள்ள வேண்டும் என நாங்கள் சொல்ல மாட்டோம்.

 222 Like 8 shares


 பார்ப்பனரும் தமிழரே - சீமான்

தமிழர் சீமானும் பார்ப்பனரே!

 249 Like 11 shares

 
20 இலட்சம் பேர் கும்பகோணம் மகாமகத்தில் கூடினர்.

பாவம் செய்தவர்கள் எல்லோரும் கூடினர் எனச் சொல்லுங்கள்!

 240 Like 16 shares

 
தமிழகத்தில் 5 இலட்சம் ''போலி வாக்காளர்கள்'' உள்ளனர் - தேர்தல் கமிசனர்

அப்படியே ''போலி அரசியல்வாதிகளையும்'' கணக்கெடுங்கள் கமிசனர்.

 238 Like 7 shares

 
''பத்திரிகைகளில் எந்த விளம்பரத்தையும் போடுவார்களா?'' என்று கேட்கிறார் நண்பர்.

''தினமலர் ஒழிக'' எனத் தினமலருக்கு விளம்பரம் கொடுத்தாலும் போடுவார்கள். (காசு, பணம், துட்டு, மணி, மணி)

 271 Like 20 shares

 
திராவிட கட்சிகளை ஒழிக்கப் போகிறேன் - சரத்குமார்

சும்மா வசனம் பேச, இது அம்பாசமுத்திரத்தில் நடக்குற சூட்டிங் இல்லை மிஸ்டர் சரத்.

334 Like 12 shares

 
ப.சிதம்பரத்தை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் - ஹெச்.ராஜா

அப்படியே இவரை கைபர் போலன் கணவாய் பக்கத்தில இறக்கி விட்டுறுங்க மிஸ்டர் சிதம்பரம்.

 272 Like 19 shares