Tuesday, August 18, 2015

  • முகநூல் பதிவுகள்:         


    • தாழ்த்தப்பட்ட அமைப்புகள் தமிழ்நாட்டில் நிறைய உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைவர்.
    ஆனால் இவர்கள் தம் தொண்டர்களுக்கு, "நம்மைத் தாழ்த்தப்பட்டவராக ஆக்கியோர் யார்? எது? எனக் கூறுவதில்லை. ஆதிக்க ஜாதி வெறியர்களை எதிர்க்கும் அதேநேரம், இந்து மதம் மற்றும் பார்ப்பனீயச் சிந்தனைகளுக்கு எதிராக தம் மக்களை உருவாக்கவில்லை. சாமி கும்பிடவும், தேர் இழுக்கவும், தங்களை விடக் கீழான ஜாதியிடம் மார் தட்டவும், தங்கள் ஜாதிக்குள்ளேயே பஞ்சாயத்து நடத்தவும் என அது வேறு திசையில் போகிறது. தலைவர்களோ பெரியார் மற்றும் பார்ப்பானீயம் குறித்துப் பேசினால், பார்ப்பனப் பத்திரிகைகள் தங்களைப் புறக்கணிக்கும் என அஞ்சுகின்றனர். மாறாக ஒவ்வொரு தொண்டரையும் பெரியாரிஸ்டாக மாற்றிப் பாருங்கள். நாம் நினைக்கிற வரலாறு நமக்குச் சொந்தமாகும்.


  •  ஒரு நண்பர் கடுமையான வார்த்தைகளுடன் என் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ளார். ஏன் நண்பா இவ்வளவு கோபம்? நீங்களும், நானும் அடித்துக் கொள்ளவா முகநூலுக்கு வந்தோம்? உங்களால் நானும், என்னால் நீங்களும் சில செய்திகளைத் தெரிந்து கொள்வோம். ஒருவேளை நமக்குள் கருத்து ஒற்றுமையே ஏற்படாமல் போனாலும் பரவாயில்லை... ஆண்டுக்கு ஒருமுறை பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் மட்டுமாவது சொல்லிக் கொள்வோம்! சரியா நண்பா?


  •  இனி தாழ்த்தப்பட்டோர் வீடுகள் எரிந்தால், உடனே இரண்டு அக்ரஹாரங்களும் எரிய வேண்டும். தமிழ்நாட்டில் எங்கு ஜாதிக் கலவரம் நடந்தாலும் நமக்குத் தான் ஆபத்து எனப் பார்ப்பனர்கள் உணர வேண்டும். அப்படி ஒரு நிலை வந்தால் மட்டுமே, ஜாதிக் கலவரத்தைத் தூண்டி விடமாட்டார்கள். தங்கள் பத்திரிகைகளிலும் ஜாதிக்கு எதிராக எழுதத் தொடங்குவார்கள்.


  • நாம் தமிழரின் ஆகஸ்ட் மாத அறிவிப்பு - "சுப்பிரமணியசாமி ஓர் தமிழன்".
    நாங்க அவரை மனுசனாவே இன்னும் நினைக்கல...

    அதுக்குள்ள தமிழன்னு சொல்லீட்டிங்களே...
 
  • என்னுடைய ஒரே நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவது - மோடி சூளுரை. 

    அட்ரா சக்கை... அட்ரா சக்கை... அட்ட்ட்ரா சக்க்க்கை!
     
     
    • வெள்ளைக்காரன் போனால், டெல்லி கொள்ளைக்காரனே ஆட்சி செய்வான்'', என்றார் பெரியார்.  
     
     கொள்ளையர்களை ''சுதந்திரமாய்'' வாழ்த்துங்கள் தமிழர்களே!
     
     
     
    • காந்தியைச் சுட்டு வீழ்த்தி, அவர் போன்றோர் பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை, தந்திரமாய் அபகரித்துக் கொண்டார்கள்.

    அவர்கள் கைகளுக்குப் போய், 68 ஆண்டுகள் முடிந்து போனது.
     
     
     
    • குறிப்பிட்ட ஒரு தலைவரைத் தீவிரமாக நேசிக்கத் தொடங்கும் போதே, அவரின் தவறுகளையும் நியாயப்படுத்தத் தொடங்கி விடுகிறோம்.
     
     
     
    • நாம் தமிழர் கொள்கைக்கும், பெரியார் கொள்கைக்கும் ஒரு வித்தியாசம் கூறு:
    ஜாதியை ''சாதி'' எனக் குறிப்பிட்டால், அது நாம் தமிழர் கொள்கை. ஜாதியை வேரடி மண்ணோடு வீழ்த்த நினைத்தால், அது பெரியார் கொள்கை.
     
     
     
    • அபுதாபி, துபாய் நாடுகளுக்கு மோடி பயணம்.
    முஸ்லிம் நாட்டிற்குச் செல்வதில் மோடிக்கும் வெட்கமில்லை. இந்து வெறித் தலைவரை அழைப்பதில் அரபுத் தலைவர்களுக்கும் வெட்கமில்லை. ஆக இருவருமே கூட்டுக் களவாணிகள். தொண்டர்கள் மட்டுமே அப்ராணிகள்.
     
     
     
    • "வாழு அல்லது வாழவிடு!" என ஒரு நண்பர், தன் இரு சக்கர வாகனத்தில் எழுதியவாறு, 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதைப் பார்த்தேன். இந்த வேகத்தில் சென்று, விபத்து ஏதேனும் நடந்தால் அவரும் வாழ முடியாது, அடுத்தவரையும் வாழ வைக்க முடியாது!
     
     
     
    •  பசுக்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் - ராஜ்நாத்சிங்
    அப்படின்னா, பசுக்களிடமே இனி ஓட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
     
     
     
    • பொதுவாகவே சிரிப்பது கிடையாது. அதுவும் வாய்விட்டுச் சிரிப்பதே கிடையாது. அதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு. எனினும் சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும் கை தட்டியும், உடலை அசைத்தும், ஓவென கத்தியும் நாம் சிரிக்கும் அந்தத் தருணங்கள் நம் பேறு. நம்மைப் போன்றே ஆயிரக்கணக்கான மக்களுக்கும் இந்த உணர்வை, தமுஎகச கலை இரவின் மூலம் வழங்கிடும் புதுகை பிரகதீஸ்வரன் & செந்தில் இருவரும் தமிழ்நாட்டின் சிவப்புச் சொத்து! தமிழர்கள் ஒவ்வொருவரும் அந்த வாய்ப்பைப் பெற்று, ஓவென சிரித்து மகிழ வேண்டும்.
    — Pragadeeshwaran Poobalam மற்றும் கருப்பு கருணா உடன்.
     
      
     
    காரைக்குடிப் பேருந்து நிலையத்தில் உள்ள சிறுநீர் கழிக்கும் இடத்தில், ஒரு பேண்டா (Fanta) பாட்டில் கொஞ்சம் குடித்த நிலையில் அப்படியே இருந்தது. யாரோ ஒரு நண்பர் பேண்டாவை வாங்கிக் குடித்திவிட்டு, அது சிறுநீருக்குச் சமம் எனக் கருதி அங்கு வைத்திருக்கலாம்.
     
     
     
    'ஜாதி நல்லது' என அமித்ஷா மதுரையில் பேசியுள்ளார்.
     எங்கள் முழக்கம் என்ன தெரியுமா அமித்ஷா?

    ஜாதியைச் சமாதியாக்கு
    சகோதரனை மனிதனாக்கு!
     
     
     
    லாலாபேட்டை அம்மன் கோயிலில், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்.
    தலையில் அடிபடக் கூடாது எனத் தலைக்கவசம் அணிந்தால் அது புத்தி. தலை என்ன ஆனாலும் பரவாயில்லை எனத் தேங்காயில் அடி வாங்கினால் அது பக்தி.
     
     
     
    மது குடிக்கக் கூடாது என்றால் அவர்கள் அம்மா!
    மது குடிக்க வேண்டும் என்றால் அவர்கள் எப்படி அம்மா?
     
     
     
    குடுமியான்மலை என்ற ஊரில், 1 இலட்சம் முதலீடு செய்தால் 1 கோடி தருவோம் என ஒரு நிதி நிறுவனம் கூறியுள்ளது. அதை நம்பி, ஈரோட்டில் உள்ள ஒருவர் 3 கோடி முதலீடு செய்துள்ளார். ஆக 3 கோடி கொடுத்து, 300 கோடி பெற ஆசை. இப்போது அந்த நிதி நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டதாகப் பத்திரிகையில் அழுகிறார். நீங்கள் அழக் கூடாது. தயவுசெய்து செத்து விடுங்கள்!
     
     
    அடுத்த வீட்டுக்காரரிடம் நட்பாயிரு. அதற்காக இடையில் உள்ள சுவற்றை எடுத்து விடாதே!
    நண்பர்கள் தின வாழ்த்துகள்!











Wednesday, March 11, 2015

கைபர் கணவாய்!

பெரியாரும், அண்ணாவும் தமிழ்நாட்டில் பிறந்தது ஒரு விபத்து - ஹெச்.ராஜா.
நீ கைபர் கணவாயில் இருந்து தப்பி வந்ததே பெரும் விபத்தல்லவா?
(இப்ப கைபர் கணவாய் இருக்கா ராஜா? நல்ல புள்ளயில்லை... அப்படியே போயிரு ராஜா...)

தெரிந்த ஹிந்தி

தமிழக, தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு இந்தி படிப்பது அவசியம் - பாஜகவின் நிர்மலா சீதாராமன்.

உங்களுக்குத் தெரிந்த ஹிந்தியை வைத்து, முதலில் வட இந்தியாவை முன்னேற்றுங்கள் மிஸ்டர் சீதாராமன்!

மண்ணின் பாரம்!

2015 ஆம் ஆண்டு யார், யாருக்கு என்ன பலன்கள் என இரவு முழுவதும் தவமிருந்தேன். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி எனக் கிழமைகள் வரிசையாக வருவதால் நாத்திகர்களுக்கு இந்த ஆண்டு பொன்னான ஆண்டு. அதேநேரம் 2015 இன் கூட்டுத் தொகையானது 2+0+1+5 = 8 வருவதால் ஆத்திகர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
நாட்டிற்கு அமைதியும், மக்களுக்கு மகிழ்ச்சியும் வேண்டும் என எண்ணுபவர்கள் இந்த ஆண்டு முழுக்கச் சுகமாக வாழ்வர்.
மாறாக நாட்டில் வன்முறையும், மக்களுக்குள் பிரிவினையும் செய்பவர்கள் இந்த மண்ணின் பாரமாகக் கருதப்படுவர்.
இதுவே எம் ஜோதிடம்.

பேசுவதே இல்லை!

திமுக தமிழன், அதிமுக தமிழனைத் திட்டுகிறான்.
அதிமுக தமிழன், மதிமுக தமிழனைத் திட்டுகிறான்.
மதிமுக தமிழன், பாமக தமிழனைத் திட்டுகிறான்.
பாமக தமிழன், தேமுதிக தமிழனைத் திட்டுகிறான்.
இப்படியாகக் கட்சி நியாயம் பேசும் தமிழன்,
தமிழ்நாட்டு நியாயத்தை மட்டும் பேசுவதே இல்லை!

"பிகே" என்ற இந்திப் படம்!

கடவுள் மறுப்பைப் பேசிய "பிகே" என்ற இந்திப் படம் சற்றொப்ப 630 கோடியை எட்டியதாகச் சொல்கிறார்கள். கடவுள், மதம், ஜாதிகளை மறுப்பது தமிழ்நாட்டிற்குக் கைவந்த கலை. ஆனால் வடமாநிலங்களோ இந்து வெறிக்கும், இந்து வன்முறைக்கும் பெயர் போன பகுதிகள். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்?

ஒருமுறை இந்தி நாளேடு ஒன்று தமிழ்நாடு குறித்து இப்படித் தலையங்கம் எழுதியது. "தமிழ்த் திரைப்படங்களில் இந்துக் கடவுள்கள் மற்றும் சாஸ்திரங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றன. ஆனால் தமிழர்களாகிய இந்துக்கள் அதை ரசித்துப் பார்க்கின்றனர். இது எப்படி சாத்தியம்? என இந்திப் பத்திரிகை எழுதியது. 

இப்போது நாம் கேட்கிறோம். எங்கள் ஊரை விட, உங்கள் ஊரில் கடவுள் மறுப்புக்கு இவ்வளவு வரவேற்பு உள்ளதே இது எப்படி சாத்தியம்?
விடை எளிதுதான். கடவுள் உள்ளிட்ட எல்லா சங்கதிகளுக்கும் அரசியல்வாதிகள், குறிப்பாகப் பத்திரிகைகள் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கின்றன. மக்களை முட்டாளாக வைத்திருப்பது ஆதிக்கவாதிகளும் அவர்களின் பத்திரிகைகளும் மட்டுமே. மக்களுக்கு இவர்கள் இடையூறு செய்யாமல் இருந்தால், இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பிகே படங்களை வெற்றி பெறச் செய்வார்கள்.

பெருங்கவலை!

எண்ணற்ற அப்பாவி மக்களை இந்து மதம் கொலை செய்கிறது. அதனைக் கிறிஸ்துவம் கண்டிக்கிறது. இஸ்லாம் செய்யும் கொலைகளை இந்து மதம் கண்டிக்கிறது. அதேபோல கிறிஸ்துவ மதம் செய்யும் கொலைகளை இஸ்லாம் கண்டிக்கிறது . ஆக எல்லாம் மதங்களும் கொலை செய்கின்றன.
கொலை செய்யும் இப்படியான மதங்கள் எதற்கு? என நாம் கேட்டால், மூன்று பேரும் ஒன்றாய் சேர்ந்து கொண்டு, "எல்லா மதங்களும் மக்களுக்கு அன்பையே போதிக்கின்றன" என்கிறார்கள். உங்ககிட்ட போயி இந்த உலகம் மாட்டிக்கிருச்சே என்பது தான் எங்களின் பெருங்கவலை!

நாய்கள் கேவலமானது அல்ல.

என் உறவினர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருக்கிறார். அவர் எங்களை முகநூலில் "நாத்திக நாய்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து மதத்தில் உங்களைத் "தேவடியா மகன்" என்று அழைக்கிறார்கள். தேவடியா மகனே என்பதைவிட நாய்கள் கேவலமானது அல்ல.

சகாயம் அய்.ஏ.எஸ்.

ஜப்பான் நாட்டில் பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் விழா நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்நாட்டில் இருந்த சகாயம் அய்.ஏ.எஸ். அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அவரும் சம்மதித்தார். அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல, தடையில்லா சான்று பெற வேண்டும். சகாயம் அவர்களும் விண்ணப்பித்தார். அரசிடம் பதில் இல்லை. இரு நாட்களுக்கு முன் அவரே தலைமைச் செயலகம் சென்றும் முயற்சித்தார். பயனில்லை. இந்நிலையில் சகாயம் வருகிறார் என, ஜப்பானில் விழா சீட்டுகள் முழுக்க விற்றுத் தீர்ந்தன. இடையில் விழாவுக்கு நான்கு நாட்களே உள்ளன. ஒரு நேர்மையான மனிதருக்கு கிடைக்கும் சங்கடத்தைப் பாருங்கள். நேர்மை இல்லை, நியாயம் இல்லை என ஒருபுறம் போராடுகிறோம். அப்படியாக வாழும் ஒரு மனிதர் வீழ்த்தப்படுவதையும் பார்க்கிறோம்.

வாழ்த்துகள்!

காதலித்த சில மாதங்களிலே, காரணமின்றி பிரிவது முதல் வகை. திருமணத்திற்கு முன்பு சில எதிர்ப்புகள் வரும். அப்போது பிரிவது இரண்டாம் வகை. திருமணத்திற்குப் பின்பு விட்டுக் கொடுக்காமலும், புரிந்து கொள்ளாமலும் பிரிவது மூன்றாம் வகை. முப்பது ஆண்டுகள் முடிந்தும் காதலை ரசித்து, ருசித்து, இன்னமும் சிரித்து வாழ்பவர்கள் நான்காம் வகை. அவர்களுக்கு "காதலர் தின வாழ்த்துகள்!"

ஜப்பான் வாழ்க்கை!

ஜப்பான் சென்று சுகபோக வாழ்க்கை வாழலாம். ஆனால் நீங்கள் மாறுப்பட்டவர்கள். இலங்கைப் பிரச்சினையின் போது ஈழத் தமிழர்களின் நியாயத்தை ஜப்பான் அரசாங்கத்திற்குப் புரிய வைத்தீர்கள். ஒரு அரசாங்கம் செய்யும் வேலையைச் சாதாரணமாய் செய்தீர்கள். ஜப்பானில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் சில அரசுப் பள்ளிகளுக்கு உதவிகள் செய்கிறீர்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பள்ளியை, குழந்தையைப் போல தத்தெடுத்துச் சீராட்டி வருகிறீர்கள். தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்கிறீர்கள். இன்றைய தினம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை, உணர்வுபூர்வமாகத் தமிழர்களுக்கு வழங்கி வருகிறீர்கள். வாழ்த்துகள் நண்பர்களே! பல்லாயிரம் மைல் கடந்தாலும் எங்கள் நினைவில் எப்போதும் நீங்கள்!

முடிவுக்கு வா!

பெரியாரை கன்னடர் என்கிறாய். உண்மைதான். தெரிந்துதான் அவரைப் பின்பற்றுகிறோம். தமிழனாய் நீ என்ன செய்தாய்? சொல், உன்னையும் பின்பற்றுகிறோம்.

அதேபோல பெரியார் ஒன்றுமே செய்யவில்லை என்கிறாய். ஆமாம்! ஒன்றுமே செய்யவில்லைதான். இப்ப அதுக்கு என்னங்கிற? நீ என்னென்ன செய்திருக்கிறாய் சொல்? உன்னையும் பாராட்டுகிறோம்.
ஏதாவது ஒரு முடிவுக்கு வா. சாகுறவரைக்கும் பேசாத... பேசிப் பேசி சாகடிக்காத...

கல்விக் கடவுள்!

இந்தியாவில் 8 கோடி குழந்தைகளின் பள்ளிப் படிப்பு பாதியிலேயே முடிகிறது. 80 இலட்சம் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை - இது ஆனந்த விகடன் வெளியிட்ட குறிப்பு.

நம் நாட்டில் கல்வித் துறைக்கு சரஸ்வதி என்ற கடவுள் இருக்கிறார். அதனால் சரஸ்வதியின் கைபேசிக்கு மேற்கண்ட புள்ளி விவரத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி, கீழே ஒரு வரியும் சேர்த்துள்ளேன். என்னம்மா... இப்படிப் பண்றீங்களேம்மா? உங்க துறையை நீங்க நல்லா கவனிக்கக் கூடாதா?

கராத்தே!

"மஞ்சள் பெல்ட்" வாங்கியதற்குப் பாராட்டுகள்!

எங்கள் மகள் கியூபா - வுக்கு நாங்கள் சொன்னது.
கடவுளை விட கராத்தே முக்கியம்!

மகளிர் தினம்!

மகளிர் தின வாழ்த்துகள் சொன்ன கையோடு, நான் குடிச்ச காபி டம்ளரையும், நான் சாப்பிட்ட தட்டையும் கழுவி வச்சேன். பேசுறதைச் செய்யும் போது மனசுக்கு நிறைவாவும், பிறரிடம் மதிப்பாவும் இருக்கு! சரியா தோழா?

பெல் நிறுவனம் விற்பனை!

பெல் நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளைத் தனி ஒரு முதலாளிக்கு விற்பனை செய்ய இருக்கிறார்கள். பெல் நிறுவனம் இந்தியாவின் நவரத்ன தொழிற்கூடம். இலாபம் கொழிக்கும் பாய்லர் ஆலை. இந்த இந்திய அரசாங்க சொத்தை, இந்தியர்களின் சொத்தைத் தனி முதலாளிக்கு விற்பனை செய்வது எந்த விதத்தில் நியாயம்?

நேற்று திருச்சி, திருவெறும்பூரில் பெல் நிறுவன ஊழியர்கள் பேரணி மூலம் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். சாதாரண ஒரு ஊழியர் இந்தியச் சொத்தை விற்காதே என்கிறார். தேசப்பற்று மிக்க அரசியல்வாதிகளோ அப்படித்தான் விற்போம் என்கிறார்கள். பாரத் மாத்தாகீ ஜே என்பவர்களே,. அவள் குரல்வளையை நெரித்து கொலை செய்யலாமா?

Sunday, December 28, 2014

ரஜினி !

இந்து மத நம்பிக்கைகள் போல, ரஜினி என்கிற மூட நம்பிக்கையாலும் தமிழர்கள் இழந்தது அதிகம்.

மதிப்பிற்குரிய மருத்துவர்!

மதிப்பிற்குரிய குழந்தைகள் நல மருத்துவர்
செங்குட்டுவன் அவர்களுக்கு வணக்கம்!
எங்கள் மகள் "கியூபா" வுக்கு இரண்டு வயது முதல் நீங்கள் தான் மருத்துவர். அப்போது தென்னூர் மருத்துவமனையில் இருந்தீர்கள். எனக்கு யாரும் உங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை. நானாக என் தேடலில் உங்களைப் பெற்றேன்.
அப்போது முதல் மதிப்புக் குறையாமல் மனதில் இருக்கின்றீர்கள்!
அதே அணுகுமுறை, கனிவான பேச்சு, உறுதியான நம்பிக்கை, இதழோர சிரிப்பு என அத்தனை அம்சங்களும் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்கின்றன. நோய்கள் சரியாக இந்த அம்சங்களும் தேவை என்கிறது மனோவியல்.
நல்ல அம்சங்களைக் கொண்ட மனிதர்கள் குறைந்து வரும் வேளையில், அப்படியாக இருப்பவர்களுக்கு நாம் நம் வாழ்த்துகளைப் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே இக்கடிதம். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதேபோன்று வாழ்த்தும் சந்தர்ப்பம் பெற்றேன்.
ஏராளமான மனிதர்களின் நினைவுகளில் நீங்கள் இருக்கின்றீர்கள்! அவர்கள் சார்பாகவும் என் எழுத்துகள் உங்களுக்கு நன்றி சொல்லட்டும்!

முற்போக்காளர்கள் வசம்!

மோடியின் ஒவ்வொரு வெற்றியும் முற்போக்காளர்களுக்குத் தோல்வி! அது பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் என அனைத்துக்கும் பொருந்தும். நாம் தாம்   எப்போதும் எதிர்க்கிறோமே என்பது இங்கு பதில் இல்லை. அவர்களின்  ஒவ்வொரு வளர்ச்சியும் நமக்கான கேள்வி. 

சூத்திர மோடியைத் தலைவனாக ஏற்று, பார்ப்பனர்கள் சாதிக்கின்றனர். மோடிக்கு, காங்கிரஸ் பரவாயில்லையோ எனச் சிலர் யோசிக்கின்றனர். ஏதோ ஒரு வகையில் இருவரும் தமிழரைச் சிதைக்கின்றனர்.

மத்தியில் எவர்  வந்தாலும் தமிழ்நாட்டை எதுவும் செய்ய முடியாது என்கிற  நிலை வேண்டும். அதற்கேற்ற அரசியல் அமைப்புகள்  வர வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு முற்போக்காளர்கள் வசம் வர வேண்டும்!