பறவைகள் இனத்தில், கழுகு மட்டுமே நீண்ட காலம் வாழும் பறவை யாகும்.கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் உயிர் வாழும். அதன் 40 ஆவது வயதில் அது சந்திக்கும் பிரச்சினைகள் என்ன தெரியுமா?
உண்பதற்குப் பயன்படும் அலகுகள் பெரிதாகி, உண்ணவே முடியாத சூழல் உருவாகும். கால் நகங்களும் மிகப் பெரியதாய் வளர்ந்துவிடும். அதுமட்டுமின்றி இறக்கைகள் அடர்த்தியாக வளர்ந்து, பறக்கவே முடியாத நிலை வரும். ஆக,பறக்கவோ, இரை தேடவோ, உண்ணவோ முடியாத கொடுமையான நிலையில் அது வாழும். அந்தக் கால கட்டத்தில் கழுகுகள் என்ன செய்யும் தெரியுமா?
பெரிதான தன் அலகுகளைப் பாறையில் தேய்த்து உடைக்கும்,
கால் நகங்களின் தேவையற்ற பாகங்களைப் பிய்த்து எரியும்,
அடர்ந்த தன் இறக்கைகளை உரித்து எரியும்.தன்னைத்தானே சீரமைத்துக் கொள்வதற்குக் கழுகுகள் எடுத்துக் கொள்ளும்
காலம் 5 மாதங்கள்.
எந்தப் பயிற்சியும் இல்லாமல், யாரும் சொல்லிக் கொடுக்காமல்
போராடி ஜெயிக்கின்றன கழுகுகள்.(எனினும் கழுகுகளுக்கு அய்ந்தறிவு எனவும், மனிதர்களுக்கு ஆறறிவு எனவும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.)
இந்தக் கொடிய போராட்டங்களுக்குப் பிறகு,கழுகுகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறது தெரியுமா? அசந்து விடாதீர்கள்...
30 ஆண்டுகள்.
No comments:
Post a Comment