2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலகின் மிகச் சிறந்த 620 விஞ்ஞானிகள் பாரிஸ் நகரில் கூடினர். அய்.நா ஆதர வோடு இயங்கும் அய்.பி.சி.சி எனப்படும் “இன்டர் கவர்மென்ட் பேனல் ஆன் கிளைமேட் சேஞ்ச்” என்ற அமைப்புதான் அவர்களை அழைத்திருந்தது. இவர்கள் அனை வரும் சேர்ந்து உலகின் வெப்ப நிலை பற்றிய ஓர் அறிக் கையைச் சமர்ப்பித்தார்கள். அதில் உள்ளவை நம்மை வியர்க்க வைக்கும் செய்திகளாகும்.
அதாவது கடந்த நூற்றாண்டில் உலகின் வெப்ப நிலை முன்பை விட 0.74 அளவுக்கு உயர்ந் திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் கடந்த 150 ஆண்டுகளில் மிக வெப்பமான 11 வருடங்கள் 1995 க்கு பிறகு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய வெப்ப அதிகரிப்பால் என்ன விளைவுகள் ஏற்படும்? 114 நாடு களைச் சேர்ந்த 560 விஞ்ஞானி கள் 4 நாள்களாக கலந்து பேசி, சில செய்திகளைச் சொல்லி இருக்கிறார்கள்.
முதற்கட்டமாக பனிமலைகள் உருகிக் கடலின் நீர்மட்டம் உயரும். இதனால் கடற்கரையோரப் பகுதி யினருக்கு ஆபத்து ஏற்படலாம். கடலின் அமிலத் தன்மை மாறி, கடல் வாழ் உயிரினங்கள் வெகு வாக அழியத் தொடங்கும். புல் வெளிகள் குறைந்து, பயிர்கள் விளைச்சல் கெடும். தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் எனப் பல அதிர்ச்சி தகவல்களை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வெப்ப நிலை உயர்வால் பாதிக்கப்படும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அவர்கள் குறிப்பிட்டுள் ளார்கள். அதன் விளைவுகள் கடந்த 2 ஆண்டுகளாகவே நமக்கு நேரிடையாகத் தெரிய ஆரம்பித் திருக்கின்றன. கங்கைச் சமவெளியின் பெரும் பகுதி பாலைவனமாக மாறிக் கொண்டே வருகிறது. வட மாநிலங்களில் கோதுமை விவசாயம் முற்றிலு மாக குறைந்து போய் விவசாயிகள் தற்கொலை செய்ய ஆரம்பித்தி ருக்கிறார்கள்.
காடுகள் அழிய ஆரம்பித் துள்ளன. இமயமலையில் இருக்கும் பனிச் சிகரங்கள் சமீபமாக மெல்ல உருக ஆரம்பித்திருக்கின்றன. இதே வேகத்தில் அவை உருகி னால் 2035 ஆம் ஆண்டில் இமய மலையே இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்திருக்கிறது அய்.நா அமைப்பு. இந்தியாவின் ஜீவ நதிகளான கங்கை, யமுனை போன்ற வை அந்தப் பனிச் சிகரங்களைத் தான் நம்பி இருக்கின்றன.
பனி உருகுவதால் முதலில் கடும் வெள்ளம் ஏற்படும். இதனால் பயிர்கள் பாதிக்கும். பின்னர் அந்தத் தண்ணீர் தீர்ந்த பிறகு நதிகள் சமவெளிப் பகுதி களாகிக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும். தற்போது இந்தியாவில் தனிநபர் ஒருவருக்கு ஆண்டுக்கு 1,820 கன மீட்டர் தண்ணீர் நுகர்வு இருக்கிறது. இதுவே 2050 இல் 1,140 கன மீட்டராக குறைந்து விடும். அதாவது 2030 ஆம் ஆண்டில் ஒவ்வொரு இந்தியரின் தண்ணீர் தேவைக்கு 38 சத வீதம் தான் கிடைக்கும். அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் 50 கோடி பேர் தண்ணீர் கிடைக்காமல் துன்பப்படுவார்கள். உணவு, தானிய உற்பத்தி 30 சதவீதம் குறையும், அரிசியும், கோதுமை யும் 17 சதவீதம் குறையும், இதனால் விலைவாசி கடுமையாக உயரும். இதுதவிர 25 சதவீத தாவரங்களும், விலங்குகளும் அழியும்.
இந்த நூற்றாண்டின் இறுதி வாக்கில் கடல் நீர் மட்டம் 40 சதவீதம் உயர வாய்ப்பிருக் கிறது. இதனால் சுமார் 5 கோடி கடற் கரைவாசிகள் தங்கள் குடியிருப் பை மாற்ற வேண்டியது வரும். சர்வதேச அளவில் உலகம் வெப்பமடைவதைத் தடுக்கும் முயற்சிகள் மிக மோசமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு தனி நபரும் தனது சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதால்தான் உலக வெப்பம் அதிகரிப்புக்குக் காரணம் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ஆகும். அந்த வகையில் உலக வெப்பத்தில் மூன்றில் ஒரு பங்கு காரணம் அமெரிக்கர்கள்தான். இவர்களை ஒப்பிடும் போது இந்தியர்களால் மாசுபடுவது 25 மடங்கு குறைவு தான். உலக வெப்பம் அதிகரிக்கக் காரணம் கார்பன் டை ஆக் சைடு, மீத்தேன், நைட்ரசஸ் ஆக்°சைடு ஆகிய வாயுக்கள் காற்றில் அதிகரிப்பதுதான்.
கடந்த 50 ஆண்டுகளில் இத் தகைய வாயுக்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதற்கு என்ன காரணம்? பெருகி வரும் வாகனங்கள், மின்சார விளக்குகள், கணினிகள், எரி சக்திப் பொருள்கள், விமானங்கள், பிளா°டிக் பொருள் கள், மரங்களை அழித்தல் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின் றன. இவற்றை நாம் அதிகளவில் பயன் படுத்துவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக வெளியாகி உலகம் வெப்பமயமாகிறது. வளரும் நவீன யுகத்தில் இவற்றை மாற்ற முடியாது என்பதால் உலக வெப்பத்தின் விளைவையும் நாம் சந்தித்தே ஆக வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம். அந்த வகை யில் இந்த 2008 ஆம் ஆண்டு கோடை காலம், முன் எப்போதை யும் விடக் கடுமையாக இருக்கும் என்கிறார்கள். இயற்கையைச் சீண்டிப் பார்த்ததின் விளைவை இவ் வுலகம் நிச்சயம் அனுபவிக்கும்.
வி.சி.வில்வம்

No comments:
Post a Comment