அமெரிக்காவின் நேரெதிர்ச் சொல் கம்யூனிசம். கம்யூனிசம் முழுதும் வேண்டாம், அறிகுறி இருந்தாலே போதும் அமெரிக்கா அழித்துவிடும். சோவியத் ரஷ்யா வைச் “சர்வதேசப் பயரங்கவாத நாடு” என்றே அமெரிக்கா அழைத்தது. இப்போது அந்தப் பயரங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. 1960 இல் தொடங்கி 80 வரை இடைப் பட்ட 20 ஆண்டுகளில் மட்டும் 40 ஆட்சிக் கவிழ்ப்புகளை சி.அய்.ஏ. மூலம் முடித்துள்ளது. ஒரு நாட்டு மக்களால் உரு வாக்கப்பட்ட ஒரு ஆட்சியை அமெரிக்காவால் எளிதில் சிதைக்க முடிகிறதென்றால் அதற்குப் பெயரென்ன? அந்தப் பெயருக்குப் பொருள்தான் என்ன? 1948 -54 இடையிலான 6 ஆண்டுகளில் 40 - க்கும் மேற் பட்ட கம்யூனிச எதிர்ப்புத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஓடின.
வியத்நாம், கொரியப் போர் களில் பலப்பல இலட்சம் மக்களைக் கொன்று குவித்த வர்கள், இன்றைக்கு ஆப்கானி° தான், ஈராக் மக்களை அழித்து வருபவர்கள், நடப்பில் லெபனான், பால°தீனர்களை அழித்துக் கொண்டிருப்பவர்கள் என்றுதான் அடங்குவார்கள்? வியத்நாம், கொரியா, சூடான், கிரெனடா, ஈக்வடார், ஈரான், நிகரகுவா, ஹெய்ட்டி, மட கா°கர், கினியா - மிஸாவ், ஜைரே, கென்யா, கானா, காங் கோ, பெனின், டான்சானியா, மொரிசிய°, ஜிம்பாவே, மொ சாம்பிக், ஜாம்பியா, எத்தி யோப்பியா, நமீபியா, அங்கோலா, லிபியா, ஜோர்டான், சிரியா, பிலிப்பைன்°, கியூபா, ஈராக், ஆப்கானி°தான், பால°தீனம், லெபனான்... என இவர்கள் குடித்த இரத்தங்கள்தான் கொஞ்ச நஞ்சமல்ல. இன்னுமா தாகம் தீரவில்லை? 1931 இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கால் வின் கூலிட்ஜ், “போர்தான் அமெரிக்காவின் பிரதான பிசின°. போரைக் கூட நாங்கள் நல்ல பிசினஸாக மாற்றிக் கொண்டோம்,” என்றார்.
எல்சால்வடாரில் “உண்மை மற்றும் நல்லிணக்கக் கமிசன்” மேற்கண்ட புலனாய்வில் உலகில் மனித உரிமை மீறல்கள் 93 விழுக்காடு அமெரிக்காவின் சி.அய்.ஏ. வில்தான் நிகழ்கிறது என்று கூறியது. 93 என்ன நூறே நடந்தாலும் யார் என்ன செய்ய முடியும்?
அமெரிக்காவின்
கள்ளக் குழந்தை இ°ரேல்!
இருபது நாடுகளை உள்ளடக் கியன அரபு நாடுகள். இவர்கள் அராபியர்கள். வெவ்வேறு நாடுகளில் பிரிந்து, கலந்து வசித்தாலும் இவர்களுக்கான மொழி, கலாச்சாரம், பண்பாடுகள் யாவும் ஒன்றே. இந்த நாடு களில்தான் எண்ணெய் வளம் குவிந்துள்ளது. உலகத் தேவை களின் மூச்சாக இருப்பது இந்தப் பெட்ரோலியப் பொருள்கள் தாம். இந்த மூச்சுக் காற்றை அராபியர்களிடம் கொடுத்து விட்டு (அது அவர்களுக்குச் சொந்தமாகவே இருந்தாலும்) வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க அமெரிக்கா என்ன . . . ! (எதையாவது பூர்த்தி செய்து கொள்ளுங்க!) எண்ணெய் வளத்தை முழுக்க அபகரித்து, அரபு நாடுகளையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். என்ன செய்யலாம்? சி.அய்.ஏ. வின் கீழ் பொறுப்பு ஒப்படைக்கப்படு கிறது. கச்சிதமாக அவர்கள் காரியம் முடித்தார்கள். எப் போது தெரியுமா? 1948 இல்! என்ன செய்தார்கள் தெரியுமா? பால°தீனத்தின் ஒரு பகுதி யையும், ஜோர்டான் நாட்டின் ஒரு பகுதியையும் அவர்களிட மிருந்து பிடுங்கி, ஒன்றாக இணைத்து, யூதர்களை அங்கு குடியமர்த்தி, “இ°ரேல்” எனப் பெயரிட்டு “ ஹேப்பி பர்த்டே டு யு” பாடிவிட்டார்கள். அன்றி லிருந்து நடந்து வரும் ஒவ்வொன் றையும்தான் உலகச் செய்தி களில் பார்த்து வருகிறோமே!
தீர்வுதான் என்ன?
அமெரிக்க மக்கள் தொகை 28 கோடி. இவர்கள்தான் உலகின் 600 கோடி மக்களுக்கும் ஆட்சி யாளர்கள். உலக நாடுகளுக்குச் சட்டதிட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதிப்பவர்கள். உலகின் ஒவ் வொரு நாட்டுக் குடிமகனின் பொருளியலையும் நிர்ணயிப்ப வர்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பு, அந்நிய முதலீடு, அமெரிக்க எதிர்ப்பு போன்றவை ஏதோ கம்யூனிசம் சார்ந்தது என யாரும் கருதக் கூடாது. அது பிழையாகிவிடும். நம் ஒவ்வொ ருவரின் தனிமனித உரிமை களையும் அமெரிக்கா பறிக்கிறது; நம் ஒவ்வொருவரின் உணர்வு களையும் அமெரிக்கா பாதிக் கிறது! அய்.நா. தலைமைக்கு மாற்றாக அமெரிக்கத் தலைமை வலுவாக முன்னெடுக்கிறது. இவ்வுலகை ஆளப்பிறந்தவர்கள் நாங்கள்தான் என ஆட்டம் போட்ட ரோம், கிரேக்க சாம்ராஜ்யங்களும், 17 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய பிரெஞ்சு, பிரிட்டிஷ், டச்சு, பெல்ஜியம் °பானிஷ் போன்ற வைகளும் சுருங்கி, சுருங்கி ஒரு வட்டத்திற்குள் வந்துவிட்டன. அதேபோல் “ எங்கள் ராஜ் யங்கள் முடிவில்லாதது,” எனப் பறைசாற்றி வந்த பைசாண் டைன், ஒட்டாமன், ருஷ்யன், மங்கோலியர், முகலாய ராஜ்யங் களும் காணாமல் போனதுடன், வரலாற்றில் கறுப்புக் கோடிட்டுப் பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இன்றைக்கு “டாலர்” தேச மான அமெரிக்கா அந்த வேலை யைத்தான் செய்து கொண்டி ருக்கிறது. வரலாறும் கறுப்பு வண்ணம் தீட்டி, அமெரிக்க முடிவை தன் நெஞ்சில் ஏந்த ஆவலோடு காத்துக் கொண்டி ருக்கிறது. ஈராக் போரில் 700 கோடி டாலர் செலவழித்து, 19,000 கோடி டாலர் வென்றது. அமெரிக்கா. எத்தனை மனிதன் செத்தான் என்பதல்ல; எவ்வளவு டாலர் குவிந்தது என்பதுதான் அமெரிக்காவின் ஒரே கணக்கு. இன்றைக்கு அமெரிக்காவில் அச்சடிக்கப்படும் டாலரில் சரிபாதிக்கும் மேல் உலகச் சந்தையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பெரிய பலமாக அமெரிக்காவுக்கு இருந்தது.
22 நாடுகளைக் கொண்ட அய்ரோப்பா கண்டம் “யூரோ” எனும் நாணயம் வெளியிட்டது. இப்போது டாலருக்குச் சம மாக, டாலரை விட மதிப்பாய் யூரோ வளர்கிறது. உலகச் சந்தையில் டாலர் இருந்த இடம் யூரோவாக மாறி வருகிறது. இந்த யூரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களுடனான வணிகம் இனி யூரோவில் தான் இருக்க வேண்டும் என முழங்கிய முதல் “ஹீரோ” சதாம் உசேன்தான். அதனால் தான் அமெரிக்கா அவரை ‘ஜீரோ’வாக்கியது. ஆக டாலரை ஒழிப்பதும், அமெரிக் காவை எதிர்ப்பதுமே உலக அமைதிக்கான ஒரே வழியென பொருளியல், சமூகவியல், அரசி யல், இன்னபிற நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. ஏறத்தாழ 600 கோடி மக்கள் வாழும் இவ்வுலகில் மனிதாபி மானம் என்பது ‘அணு’ அள வைவிட மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஏதாவது ஒன்றிரண்டு நிகழ்வுகளை வைத்து மட்டும் “மனிதாபி மானம் இன்னும் செத்துவிட வில்லை”, என நமக்கும் நாமே ஆறுதல் சொல்லிக் கொண்டால் தான் உண்டு.
இவையெல்லாம் ஏதோ உலக விசயங்கள் என நாம் ஒதுக்கிவிடக் கூடாது. ஒவ் வொன்றும் நம் தனிமனித வாழ்க்கையைப் பாதிப்புக்கு உள்ளாக்கும். அதிலிருந்து நாம் மீள வேண்டுமானால் அது குறித்து நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
(நிறைவு)
வி.சி.வில்வம்

அருமையான பதிவு மேலும் தொடர வாழ்த்துக்கள்
ReplyDelete