Tuesday, January 12, 2016

 முகநூல் பதிவுகள்! 


அரசுப் பள்ளியில் 50 ஆயிரம் சம்பளம் பெற்று, கவுரவத்துடன் வாழ்வதாய் எண்ணும் ஒருவர், அதே பள்ளியில் தம் பிள்ளைகளைப் படிக்க வைத்தால், கவுரவம் போய் விடுவதாய் எண்ணுகிறார்.
 
 520 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 87 shares
 
 
 
உம்மை நினைக்காத
நாளும் உண்டோ?
- 24.12.1973
 
 253 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 18 shares
 
 
 
 
தன் நாடகத்தை விளம்பரம் செய்ய, சார்லி சாப்ளின் துண்டறிக்கைக் (NOTICE) கொடுப்பாராம். மக்கள் அதைப் படிக்காமல் கசக்கி எறிவார்களாம். மக்களைப் படிக்க வைக்க என்ன செய்யலாம் என சாப்ளின் யோசித்தாராம். பின்னாளில் துண்டறிக்கையை இவரே கசக்கிக் கொடுப்பாராம். உள்ளே என்ன இருக்கிறது என மக்கள் பிரித்துப் படித்தார்களாம்.
 
 321 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 30 shares
 
 
 
உலகம் அமைதி பெற 'சண்டி யாகம்' தேவை இல்லை.
உங்கள் 'சண்டியர் தனம்' குறைந்தால் போதும்!
 
 212 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 8 shares
 
 
 
"நான் அடிச்சு சொல்றேன், நம்மை விட பிராமணர்கள் புத்திசாலிகள்", என்றான் நண்பன்.
நானும் மறுக்கலை! நாம முட்டாளா இருந்தா, அவுங்க புத்திசாலிதான்! நீ புத்திசாலியா மாறிப் பாரு, அவுங்க முட்டாளா தெரிவாங்க!
 
 333 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 14 shares
 
 
 
ஆங்கிலப் புத்தாண்டை எதிர்த்து இந்து முன்னணி போராட்டம் - இராம.கோபாலன்.
உலகமயமாக்கல் எனும் பெயரில், பாரதமாதாவை அக்குவேறு, ஆணிவேறாக ஆங்கிலேயருக்கு விற்கிறார்கள். அப்போது பொங்கவில்லை கோபம். புத்தாண்டிற்கு வந்து, டண்டனக்கா..னக்கா.. னக்கா.. என்று குதிக்கிறார் இராம.கோபாலன்.
 
 155 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 11 shares
 
 
 
''தமிழக முதல்வராக'' வேண்டும் என்பவர்கள் வரிசையா வாங்க. அனைருக்கும் ஒரு ஆண்டு வாய்ப்புத் தரப்படும். உங்கள் காலத்தில் தமிழ்நாடு 10 % முன்னேற வேண்டும். . இல்லையெனில் உங்களுக்குத் தூக்கு உறுதி. சம்மதம் எனில் வரிசையா வாங்க!
 
 183 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 11 shares
 
 
 
பல்லவன் இரயிலில் வந்தேன். என் அருகே கணவன், மனைவி, ஒரு கைக்குழந்தை. குழந்தைத் திடீரென அழுதது. அம்மா சமாதானம் செய்கிறார். குழந்தையோ வீறிட்டு அழுகிறது. பலரும் பரிதாபமாய் பார்க்க, குழந்தை 0.30 நிமிடமாக அழுகிறது. குழந்தையின் அப்பா என்ன செய்தார் தெரியுமா? ஆதிபராசக்தியே போற்றி! போற்றி! எனும் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.
 
 136 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
அருகிலேயே ஐயப்பன் சாமியை (?) வைத்துக் கொண்டு, சுவாமியே ........... சரணம் ஐயப்பா......... என ஏன் கத்துகிறீர்கள்? அவருக்குக் காது கேட்காதா அல்லது அவரைக் கேலி செய்கிறீர்களா?
 
 183 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 11 shares
 
 
 
மேடையில் ஒருவர் எவ்வளவு அற்புதமாகப் பேசினாலும், சில நாடுகளில் கைத்தட்ட மாட்டார்களாம். பேசி முடித்த பிறகே, எழுந்து நின்று கரவொலி செய்வார்களாம்.
நம் நாட்டில் கைத்தட்டலும், விசில் சத்தமும் நல்ல பல கருத்துகளைக் கேட்கவிடாமல் செய்கின்றன.
 
 201 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
ஜல்லிக்கட்டு மாதிரி சிங்கக்கட்டு நடத்தினால் என்ன?
வீரம் என்றான பிறகு மாடென்ன? சிங்கமென்ன?
 
 330 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 23 shares

No comments:

Post a Comment