Wednesday, March 6, 2013

இவள் கண்ணகி !


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    கண்ணகி புத்தியற்ற மடப்பெண் (22.07.1951) என்றார் பெரியார். எப்படிச் சொல்லலாம் எனக் குதித்தார்கள் ? கண்ணகியின் கதை அறிவுக்கு உட்படாமல், இழிவையும், கழிவையும் கொண்டது என்றார் பெரியார். அதெல்லாம் தெரியாதுகண்ணகி ஓர் தமிழச்சி, கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டும் என்றனர். அந்தப் பழக்கமே எனக்கில்லை என்றார் பெரியார். விவாதங்களின் இறுதியில் வென்றவர் பெரியார். இப்போது கண்ணகியைக்  கடைக்கண்ணால் கூட யாரும் பார்ப்பதில்லை.

நமக்கொரு சந்தேகம். கண்ணகியைப் பிடிப்பவர்களுக்குக் கண்ணகி மாதிரி ஒரு மகள் வாழ்க்கையும், பிள்ளையாரைப் பிடிப்பவர்களுக்குப்
பிள்ளையார் மாதிரி ஒரு மகன் வாழ்க்கையும் கிடைத்தால் ஏற்பார்களா என்பதே நம்முடைய ஆகச் சிறிய கேள்வி ?

தமிழர்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது பார்ப்பனத்தனம். அதை அப்படியே ஏற்பது பண்பாட்டுத்தனம் போல.
ஆனால் இவைகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம்இதன் அண்மைக்கால அடையாளமாக பிரளயனின் நாடகத்தை நாம் பார்க்கலாம். அதன் பெயர் வஞ்சியர் காண்டம். தமிழ்நாட்டின் 10 நகரங்கள் இந்த நாடகத்தைக் கண்டிருக்கின்றன.

நாடகம் என்றவுடன் உங்களுக்குத் தொலைக்காட்சிகள் நினைவுக்கு வரக்கூடும். அது பிழை. நம் குழந்தைகளுக்கும் சேர்த்து செய்கின்ற பெரும் பிழை. நிஜ நாடகம் பாருங்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தாலும் தேடி, ஓடிப் பாருங்கள். அது சொல்லும் கலை; அது  சொல்லும் கருத்து. கருத்தைக் கலையாய் சொல்லும் பிரளயன் நாடகங்கள், முப்பதுக்கும் மேல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன.

இந்நாடகத்தைப் பேராசிரியர் ராஜு நெறியாள்கை செய்துள்ளார். இசை, பாடல்கள், காட்சியமைப்பு என அனைத்துமே அத்தனை அழகு.
சுமைதூக்கும் தொழிலாளி, வர்ணம் பூசுபவர், அப்பள வியாபாரி, அரசு ஊழியர், ஆய்வு மாணவர்கள் என 45 பேர்களின் கூட்டுழைப்பு!
வாராந்திரத்தின் ஓர் இறுதி நாளில் இவர்கள் திருச்சியில் கூடினார்கள். இவர்களே வியக்கும் வண்ணம் மக்களும் கூடினார்கள்.

நாடகம் தொடங்கியது. சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான வஞ்சிக்காண்டத்தின் ஒரு பகுதியே நாடகக் கரு என்று அறிவித்தார்கள்.  கண்ணகியைப் புதுமையாய்ப் பார்க்கலாம் என்று விளம்பரமும் செய்திருந்தார்கள்.

கண்ணகிக்குக் கோயில் எழுப்பி விழா எடுக்கிறான் சேரன் செங்குட்டுவன். அவ்விழாவில் கண்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு, தோழி தேவந்தி மற்றும் ஐயை ஆகியோர் பங்கேற்கின்றனர்தெய்வக்கோலம் பூண்ட  கண்ணகிக்கும், இவ்வஞ்சியரது வாழ்வனுபத்தில் தோற்றமளித்த கண்ணகிக்கும் நிறைய முரண் இருப்பதைக்கண்டு  அதிர்ச்சி அடைகின்றனர்.

கண்ணகியை எல்லோரும் தொழுகிறார்கள். நீங்கள் ஏன் தொழவில்லை? எனச் செவிலித்தாய் காவற்பெண்டுவைக் கேட்க, அவரோ கொதித்துப் பேசுகிறார். ''கண்ணகியைத் தெய்வம் என்று சொல்வதை என்னால்  ஜீரணிக்க முடியாது. யாரைத் தெய்வம் என்கிறீர்கள்? கண்ணகியா தெய்வம் ? யாருக்கு வேண்டும் உங்கள் கண்ணகி எனப்  பொறிந்துத் தள்ளுகிறார். கண்ணகியின் கோலம் கோவலனுக்குப்  பெருமை சேர்க்கலாம். ஆனால் உண்மைக் கண்ணகியை உங்களுக்குத் தெரியுமா?  கண்ணகியை என் மகள் போல் வளர்த்தேன்அவளை எப்படி நான் தெய்வமாய்ப்  பார்ப்பேன்
? என அழுகிறார். தொடர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார்.

கண்ணகியின் 12 ஆவது வயதில் கோவலனோடு 
திருமணம் முடிகிறது. அப்போதுதான் தேர்ந்த பொற்கொல்லர்களால் காற்சிலம்பு  செய்யப்படுகிறது. திருமணம் முடிந்த ஓர் ஆண்டில் கோவலன் பிரிந்து போகிறான். ஒருசமயம் கண்ணகியின் கால் ஒன்றில் காற்சிலம்பைக்  காணவில்லை. பதறிப் போகிறார் செவிலித்தாய். உன் தந்தை ஆசை, ஆசையாய் வழங்கிய பரிசு அது. எங்கே சிலம்பு ? எனக் கேட்க, கால் அருகியதால் கழற்றிவிட்டேன் எனக் கண்ணகிப் பதில் சொல்கிறார்.

நாளடைவில் கோவலன் வரமாட்டான் என்கிற முடிவுக்கு கண்ணகி வருகிறார். ஆனால் செவிலித்தாயோ  உன் கணவர்  நிச்சயம் வருவார், கவலைப்படாதே என்கிறார். பகல் - இரவுநிலவு - கதிர்,   நீர் - நெருப்புகுளிர் - வெப்பம்இன்பம் - துன்பம் என்பதைப் போல  காதல்பிரிவு என்பதும் நடைமுறையில் இருக்கிறது என்கிறார் கண்ணகி.  நீ செவிலித்தாயாக இருந்து எங்கள் குடும்பத்திற்குச் சேவகம் செய்கிறாய். நீங்கள் உரிமைகள் இழந்த அடிமை மக்களாக இருக்கிறீர்கள். நானோ அடிமை என்பதையே உணராத அடிமையாக இருக்கிறேன். காற்சிலம்புகள் எனக்கு, கால் விலங்குகள் போல உள்ளன. எனவே அதைக் கழற்றிவிடுங்கள்  என்கிறார். இறுதியில் இன்னொரு சிலம்பும்  அகற்றப்படுகிறது.

அடிமைத்தனத்திற்கு எதிர்ப்பதம் என்ன? எனக் கண்ணகி கேட்க, செவிலித்தாய் தெரியவில்லை என்கிறாள். என்னைப் போல எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது என்று கண்ணகி சொல்வதாகச்  செவிலித்தாயின் நினைவலைகளில் ஓடி முடிகிறது.

இந்நிலையில் கண்ணகியின் தோழி தேவந்தி சிலவற்றைப் பகிர்கிறார். கோவலன் சென்ற பிறகு எல்லா அணிகலன்களையும் துறந்த நிலையில் கண்ணகி இருக்கிறாள். அந்நேரத்தில், "நாளை கோவலன்  பெற்றோர் வருகிறார்கள். மலர்கள் சூடிகாற்சிலம்பை அணிந்து கொள் என்கிறார் தோழி. கோபமுற்ற கண்ணகி, காற்சிலம்பை வாங்கி எறிகிறாள். என் மாமனார், மாமியாருக்காக நான் எந்த அணிகலனும் அணியமாட்டேன். என் விருப்பத்திற்கு மாறான எதையும் செய்யச் சொல்லாதீர்கள் எனக் குமுறுகிறாள்.

இப்படியெல்லாம் பேசாதே கண்ணகி. தெய்வங்களை நன்றாகத் தொழு. நிச்சயம் உன் கோவலன் வருவான் என்கிறாள் தேவேந்தி. தெய்வங்களைத் தொழுவது என் இயல்பு அல்ல என்கிறாள் கண்ணகி. அப்படியானால் உங்களுக்காக நான் தொழுகிறேன் என்கிறாள் தோழி. வேண்டாம், எனக்காக நீ தொழ வேண்டாம். உன் கணவனுக்காக நீ நாள்தோறும் தொழுகிறாயே, உன் கணவன் வந்துவிட்டானா எனத் திருப்பிக் கேட்கிறாள் கண்ணகி.

இப்படியாக அடிமைத்தனத்தை வெறுப்பவராக, அடிமை மக்களின் உரிமைகளுக்குப் பரிவு காட்டுபவராக, மூடத்தனங்களை  அகற்றுபவராக, முற்போக்குக் குணம் கொண்டவராக கண்ணகி சித்தரிக்கப்படுகிறார். தெய்வமாக்குவதும் ,  வழிபடுவது தவறு என்பதாக நாடகம் முடிவு பெறுகிறது
                                             
                                                                                                    வி.சி.வில்வம்



No comments:

Post a Comment