Wednesday, January 27, 2016

சகாயம் அய்.ஏ.எஸ் அவர்களுடன்! (26.01.2016)








Thursday, January 14, 2016

Tuesday, January 12, 2016

 முகநூல் பதிவுகள்! 


அரசுப் பள்ளியில் 50 ஆயிரம் சம்பளம் பெற்று, கவுரவத்துடன் வாழ்வதாய் எண்ணும் ஒருவர், அதே பள்ளியில் தம் பிள்ளைகளைப் படிக்க வைத்தால், கவுரவம் போய் விடுவதாய் எண்ணுகிறார்.
 
 520 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 87 shares
 
 
 
உம்மை நினைக்காத
நாளும் உண்டோ?
- 24.12.1973
 
 253 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 18 shares
 
 
 
 
தன் நாடகத்தை விளம்பரம் செய்ய, சார்லி சாப்ளின் துண்டறிக்கைக் (NOTICE) கொடுப்பாராம். மக்கள் அதைப் படிக்காமல் கசக்கி எறிவார்களாம். மக்களைப் படிக்க வைக்க என்ன செய்யலாம் என சாப்ளின் யோசித்தாராம். பின்னாளில் துண்டறிக்கையை இவரே கசக்கிக் கொடுப்பாராம். உள்ளே என்ன இருக்கிறது என மக்கள் பிரித்துப் படித்தார்களாம்.
 
 321 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 30 shares
 
 
 
உலகம் அமைதி பெற 'சண்டி யாகம்' தேவை இல்லை.
உங்கள் 'சண்டியர் தனம்' குறைந்தால் போதும்!
 
 212 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 8 shares
 
 
 
"நான் அடிச்சு சொல்றேன், நம்மை விட பிராமணர்கள் புத்திசாலிகள்", என்றான் நண்பன்.
நானும் மறுக்கலை! நாம முட்டாளா இருந்தா, அவுங்க புத்திசாலிதான்! நீ புத்திசாலியா மாறிப் பாரு, அவுங்க முட்டாளா தெரிவாங்க!
 
 333 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 14 shares
 
 
 
ஆங்கிலப் புத்தாண்டை எதிர்த்து இந்து முன்னணி போராட்டம் - இராம.கோபாலன்.
உலகமயமாக்கல் எனும் பெயரில், பாரதமாதாவை அக்குவேறு, ஆணிவேறாக ஆங்கிலேயருக்கு விற்கிறார்கள். அப்போது பொங்கவில்லை கோபம். புத்தாண்டிற்கு வந்து, டண்டனக்கா..னக்கா.. னக்கா.. என்று குதிக்கிறார் இராம.கோபாலன்.
 
 155 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 11 shares
 
 
 
''தமிழக முதல்வராக'' வேண்டும் என்பவர்கள் வரிசையா வாங்க. அனைருக்கும் ஒரு ஆண்டு வாய்ப்புத் தரப்படும். உங்கள் காலத்தில் தமிழ்நாடு 10 % முன்னேற வேண்டும். . இல்லையெனில் உங்களுக்குத் தூக்கு உறுதி. சம்மதம் எனில் வரிசையா வாங்க!
 
 183 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 11 shares
 
 
 
பல்லவன் இரயிலில் வந்தேன். என் அருகே கணவன், மனைவி, ஒரு கைக்குழந்தை. குழந்தைத் திடீரென அழுதது. அம்மா சமாதானம் செய்கிறார். குழந்தையோ வீறிட்டு அழுகிறது. பலரும் பரிதாபமாய் பார்க்க, குழந்தை 0.30 நிமிடமாக அழுகிறது. குழந்தையின் அப்பா என்ன செய்தார் தெரியுமா? ஆதிபராசக்தியே போற்றி! போற்றி! எனும் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.
 
 136 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
அருகிலேயே ஐயப்பன் சாமியை (?) வைத்துக் கொண்டு, சுவாமியே ........... சரணம் ஐயப்பா......... என ஏன் கத்துகிறீர்கள்? அவருக்குக் காது கேட்காதா அல்லது அவரைக் கேலி செய்கிறீர்களா?
 
 183 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 11 shares
 
 
 
மேடையில் ஒருவர் எவ்வளவு அற்புதமாகப் பேசினாலும், சில நாடுகளில் கைத்தட்ட மாட்டார்களாம். பேசி முடித்த பிறகே, எழுந்து நின்று கரவொலி செய்வார்களாம்.
நம் நாட்டில் கைத்தட்டலும், விசில் சத்தமும் நல்ல பல கருத்துகளைக் கேட்கவிடாமல் செய்கின்றன.
 
 201 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
ஜல்லிக்கட்டு மாதிரி சிங்கக்கட்டு நடத்தினால் என்ன?
வீரம் என்றான பிறகு மாடென்ன? சிங்கமென்ன?
 
 330 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 23 shares
முகநூல் பதிவுகள்!  





மக்கள் எதற்கும் கவலைப்படக் கூடாது - ஜெயலலிதா வேண்டுகோள்.
சரிங்க! நாங்க ஜாலியா இருக்கோம்.
 
 334 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 16 shares
 
 
 
 மழை பாதிப்பால் மக்கள் நிற்பது தெருக் கோடி.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இன்றைய கும்பாபிசேக செலவு 30 கோடி.
 
 252 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 37 shares
 
 
 
பிரான்ஸ் நாட்டு இராணுவம் பிற நாட்டு மக்களைத் துப்பாக்கியால் சுடுகிறது. அவர்கள் பிரான்சுக்கு வந்து சுடுகிறார்கள்.
இரண்டு பேரும் திருந்துங்கடா!
 
 146 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 4 shares
 
 
 
சீமான் தன் கட்சியை, இவ்வளவு முழு நீள நகைச்சுவைச் சித்திரமாக எடுக்கக் கூடாது.
 
 237 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 2 shares
 
 
 
இயற்கைக்கு நாம் செய்த பெரும் பிழை...
இடியாய் விழுகிறது நம் மீது மழை!!
 
160 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது. 1 பகிர்வு
 
 
 
திருவாரூரில் குடும்பத்துடன் ஆட்டோவில் போனேன். கட்டணம் ரூபாய் 100 கேட்பார் என நினைத்தேன். ஆனால் 70 தான் கேட்டார். திரும்பும் போது வேறொரு ஆட்டோகாரர், 60 ரூபாய் மட்டுமே கேட்டார். பரவாயில்லையே, திருவாரூர் நல்ல ஊராக இருக்கிறதே என நினைத்தேன். ஆக, ஒரு ஊருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க இரண்டு பேர் போதும்!
 
 212 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
பிரபாகரன் அவர்களே! உங்கள் நிலை எனக்குத் தெரியாது. ஆனால் இதற்குக் காரணமான இந்தியத் தேசியத்திற்கும், பார்ப்பனீய மோசடிக்கும் ஒருபோதும் நாங்கள் துணை போக மாட்டோம். உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்!
 
 151 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 1 பகிர்வு
 
 
 
உங்கள் மீது ஒருவர் கல் எறிந்தால், அவர் மீது நீங்கள் பூவை வீசுங்கள். மீண்டும் அவர் கல் எறிந்தால், அவர் மீது பூத்தொட்டியை வீசுங்கள். கொய்யால சாகட்டும்!
(இது ஓர் சகிப்புத் தன்மையற்ற பதிவு)
 
 208 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.  11 shares
 
 
 
தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் - ரஜினி
எங்களுக்கு எதுவும் வேண்டாம் ரஜினி! வழக்கம் போல நீங்கள் அடுத்த படம் எடுங்கள். நாங்கள் பிச்சை போடுகிறோம்!
 
 411 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 58 shares
 
 
 
மழை பெய்யத் தொடங்கிய முதல் நாள், "வருண பகவான் கருணையால் சென்னையில் மழை", எனத் தினமலர் செய்தி வெளியிட்டது. இப்போதைய சூழலில் அந்த வருண பகவான் கிடைத்தால், சென்னை மக்கள் மிதித்தே கொல்லுவார்கள்.
 
 229 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.  24 shares
 
 
 
( நாம் யாரையும் குறிப்பிட்டுப் பேச விரும்பவில்லை. எனினும் இப்போது நாம் அறியாமல் போனால், இறப்புக்குப் பின் நமக்குத் தெரியாமலே போகும் )
நுங்கம்பாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வியாசர்பாடி ஏரி, முகப்பேர் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி, ஆவடி ஏரி, கொளத்தூர் ஏரி, இரட்டை ஏரி, வேளச்சேரி ஏரி, பெரும்பாக்கம் ஏரி, பெருங்களத்தூர் ஏரி, மாம்பழம் ஏரி, வில்லிவாக்கம் ஏரி, பாடியநல்லூர் ஏரி, விச்சூர் ஏரி, வேம்பாக்கம் ஏரி, பிச்சாட்டூர் ஏரி, திருநின்றவூர் ஏரி, பாக்கம் ஏரி, முடிச்சூர் ஏரி, சேத்துப்பாடு ஏரி, செம்பாக்கம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, அல்லிக்குளம் ஏரி, கோடம்பாக்கம் டேங்க் ஏரி, ஓமந்தூரார் குளம், வள்ளுவர் கோட்டம் குளம், சென்னை நீதிமன்றக் குளங்கள், ஆலப்பாக்கம் ஏரி, வேப்பேரி, விருகம்பாக்கம் ஏரி, கோயம்பேடு சுழல் ஏரி, கொரட்டூர் ஏரி, தியாகராயர் நகர் ஏரி, உள்ளகரம் ஏரி, தலக்காஞ்சேரி, பல்லாவரம் பெரிய ஏரி, பீர்க்கங்கரணை ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, கோலடி ஏரி, வளசரவாக்கம் ஏரி, பாவேரிப்பட்டு ஏரி, மதுராவயல் ஏரி, செந்நீர்குப்பம் ஏரி ஆகிய இவையனைத்தும் சென்னையில் காணாமல் போன ஏரிகள்.
1906 ஆம் ஆண்டின் படி, சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் இருந்ததாகவும், தற்போது 43 நீர்நிலைகள் மட்டுமே உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் 96 விழுக்காடு நீர்நிலைகள் அழிந்துவிட்டதாம்.
இது சென்னையில் மட்டும். இதுதவிர தமிழகம் முழுக்கக் கணக்கிட்டால், நம் சாவு நம் கையில்!
 
 196 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 122 shares
 
 
 
கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொருள்கள் வழங்கிய போது, 2 போலிஸ் வந்து, 'எங்களுக்கும் வேண்டும்' என்றார்கள்.
வானம் கெட்ட கடலூரில், மானம் கெட்டதுகள்.
 
 241 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 11 shares
 
 
 
 
வெள்ளம் பாதித்த மக்களுக்கு கிரிக்கெட் வெற்றி சமர்ப்பனம் - தினமலர்
ஏன்டா! நீங்க திருந்தவே மாட்டிங்களா? எதை, எதுக்குடா சமர்ப்பனம் செய்றீங்க?
 
 206 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 7 shares
 
 
 
 
ஜப்பான் முழுமதி அறக்கட்டளை நண்பர்களுக்கு வணக்கம்!
உலகம் முழுவதும் சிறப்பாக இயங்குகிற தமிழர் அமைப்புகள் உண்டு. ஆனால் ஜப்பானில் அப்படி இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. அது 2000 - 2003.
காலங்கள் கடந்த நிலையில் நீங்கள் அனைவரும், பிற நாட்டுத் தமிழர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். ஜப்பான் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கான உங்களின் உழைப்பு உன்னதமானது. முழுமதியின் குறிக்கோள்கள் அதனை தெளிவாக உணர்த்துகின்றன. தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள், தோழமை சந்திப்புகள், குழந்தைகள் மீதான கவனம் என உங்களின் ஒவ்வொன்றும் சிறப்பு!
தமிழீழம் துன்புற்ற நேரத்தில், தைரியமான, நேர்த்தியான செயல்களால் ஜப்பான் உங்களை நிமிர்ந்து பார்த்தது; இந்தியா குனிந்து நின்றது. உங்களுக்கான அடையாளங்கள் வலுப்பெற்ற சிறந்த தருணம் அது. அதேபோல தமிழ்நாட்டிலும் உங்கள் தடயங்களும் ஆழமாகவே பதிவாகின்றன. உங்களின் சமூக உதவிகள் ஒருபுறம் இருந்தாலும், அதைச் செய்யும் முறை கண்டு நான் அசந்து போகிறேன். அப்படி ஒரு வரையறை! அப்படி ஒரு நேர்த்தி!
உங்கள் அமைப்பின் தேர்ந்த கட்டமைப்பிற்கு, மேலும் ஒரு உதாரணம் வெள்ள நிவாரணம்! ''சென்னை, கடலூரில் நடப்பது என்ன?'', எனக் கடைக்கோடித் தமிழன் முழுமையாய் அறியும் முன்னே, முழுமதி குழு அமைத்துவிட்டது. உலகம் முழுக்க உதவிய தமிழர்கள் போலவே நீங்களும் செய்தீர்கள்.
எனினும் எனது எழுத்துகள் குறிப்பிட விரும்புவது "உங்களின் தனித்தன்மை!" தமிழ்நாட்டின் ஏதோ ஒரு அமைப்பிற்கு நீங்கள் பணம் அனுப்பி, நாங்களும் வெள்ள நிவாரணம் கொடுத்தோம் என, மெல்ல நகர்ந்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை நீங்கள்.
குழு அமைத்தது, மக்களுக்கு உதவிகள் செய்ய மக்களிடமே நன்கொடை திரட்டியது, அதை நிருவாகம் செய்ய பொறுப்பாளர்கள் நியமித்தது, தமிழ்நாட்டில் ஒரே இடத்தில் இல்லாமல் பல ஊர்களில் மய்யம் அமைத்தது, அதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர், சில களப்பணியாளர்கள், ஏதோ பாதிக்கப்பட்ட இடங்களில் உதவி செய்யுங்கள் என்று கூறாமல், அதையும் ஜப்பானில் இருந்து இடங்களைத் தேர்வு செய்தது, வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் தன்னார்வக் குழுக்களை அமைத்தது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகச் சரியாகப் போனதா எனக் கவலைப்பட்டது, மேலும் எங்குப் பாதிப்புகள்? வேறு என்ன உதவிகள் வேண்டும்? எனத் தொடர்ந்து உடல் இரத்தம் போல இயங்கியது, அதற்கென வாட்ஸ் அப்பில் "கடலூருக்கு உதவுவோம்" எனத் தனி வட்டம் தொடங்கியது, பின்னர் தமிழகத்தில் உதவிகள் போன ஊர்களின் பெயரில் தனி வட்டம் தொடங்கியது என ஒரு அரசு அமைப்பே தோற்றுப் போகும் வண்ணம் நீங்கள் செய்தீர்கள். அதுவும் விரைந்து செய்து, வியக்க வைத்தீர்கள்.
தமிழக நிருவாகத்தை நாம் அறிவோம். ஆனால் ஜப்பானில் இருந்து நீங்கள் செய்து வரும் நிருவாகம் ஒரு படிப்பினை! ஒரு பெருமிதம்! நீங்கள் தொடர வேண்டும்! அந்த ஆசையில் தான் உங்களில் ஊடுருவி, ஒவ்வொன்றையும் எழுத முயற்சிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் கைப்பிடித்தும் நான் நன்றி கூறுவேன்.
நன்றி தமிழர்கள்!
நன்றி முழுமதி!
நன்றி ஜப்பான்!
- வி.சி.வில்வம்
 
 118 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 7 shares
 
 
 
நான்கு நாட்கள் வேலையாகக் கேரளா செல்கிறேன். வந்த பிறகு என்னை யாரும் வந்தேறி எனச் சொல்லக் கூடாது.
ஆனால் அங்கு நிறைய "மாட்டுக்கறி" சாப்பிடுவேன். வேண்டுமானால் என்னை "இந்து இல்லை" எனச் சொல்லுங்கள்!
 
 267 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
'அம்மா, அம்மா' என்று அழைப்பதால், என் பெயரே எனக்கு மறந்து விட்டது.
அப்படியா...? இதோ நான் நினைவுப்படுத்துகிறேன். உங்கள் பெயர் ஜெயலலிதா!
 
 289 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 14 shares
 
 முகநூல் பதிவுகள்! 


மாட்டுக்கறி வேண்டாம், ஆட்டுக்கறி வேண்டாம், கோழிக்கறி வேண்டாம், மீன் வேண்டாம், நண்டு வேண்டாம், மொத்தத்தில் அசைவமே வேண்டாம் என வரணும். அப்பத்தான் நம்மாளுங்க பி.ஜே.பியே வேண்டாமென்ற முடிவுக்கு வருவார்கள்.
 
295 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 6 shares
 
 
 
சந்தேகத்தின் பேரில் பிடிபடுகிற பயங்கரவாதிகளைக் கூட அவன், இவன், வாடா, போடா என்கிற ரீதியில் எழுதுகிறது தினமலர்.
அப்படிப் பார்த்தால் இந்நாட்டில் நிரூபிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பார்ப்பனர்கள். அவர்களை எத்தனை முறை நாம் வாடா, போடா என்று அழைக்க வேண்டும்!
 
 189 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 11 shares
 
 
 
 
மாட்டுக்கறி சாப்பிட்டவரை நீ வெட்டுன.
அவனுங்க கோழியை நறுக்குற மாதிரி நறுக்கிட்டாங்க.
பீகார் தேர்தல சொன்னேன்.
 
 301 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 16 shares
 
 
 
தீபாவளி வெடி விழுந்து, திருச்சியில் ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது. நரகாசுரனை விட, நாம் கொடியவர்கள்.
 
 205 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.  5 shares
 
 
 
போலித் தமிழ்த் தேசியம் பேசுபவர்களிடம், ''ஏன் பார்ப்பனர்களிடம் விலை போனீர்கள்?'' என்று கேட்டால், நாங்கள் அவர்களிடம் விலை போகவில்லையே எனப் பதறுகிறார்கள்.
சரி! யாரிடம் தான் விலை போனீர்கள், அதையாவது சொல்லுங்கள்!
 
 194 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 4 shares
 
 
 
இட ஒதுக்கீட்டை அகற்ற வேண்டும் - ஆர் எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.
உங்களை இந்த நாட்டில் இருந்து அகற்றும் போது, இட ஒதுக்கீடும் அகன்று விடும் மிஸ்டர் பகவத்.
 
 417 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.  35 shares
 
 
 
என்னது... மோடி இலண்டன் போயிட்டாரா?
இந்தியாவில விக்கிறதுக்கு என்ன பாக்கி இருக்குன்னு, இப்ப இலண்டன் போனாரு?
 
 237 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 7 shares
 
 
 
கட்டுக் கட்டாய் பணம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள்
சொட்டு, சொட்டாய் மழை நீரையும் சேர்த்திருக்கலாம்.
 
 199 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 9 shares
 
 
இலண்டனில் அம்பேத்கர் சிலைக்குப் பிரதமர் மரியாதை.
மோடிஜி! போட்டோ எடுத்தாச்சு, எந்திரிங்க...
 
 355 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 47 shares
 
 முகநூல் பதிவுகள்! 


விருத்தாசலம் இரயில் நிலையத்தில் சுமார் 20 குரங்குகள் நடைமேடையில் அலைகின்றன. (பிளாட்பாரம் டிக்கெட் வாங்காமல்) அத்தனைக் குரங்குகளும் மனிதரின் உணவுகளையே அபகரிக்க முயல்கின்றன.
அடுத்தவரின் பொருளை அபகரிக்கும் இந்த எண்ணம், அந்த குரங்குகள் மூலமே நமக்கும் வந்திருக்குமோ?
 151 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 1 பகிர்வு
 
 
 
ஒரு மனுசன் பணிவா இருக்குறது தப்பா?
 
 568 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 5 shares
 
 
 
10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒன்னா சேர்ந்துப் பார்த்திருப்பீங்க! 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்துப் பார்த்திருப்பீங்க! ஏன் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கூட பார்த்திருப்பீங்க! ஆனா ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து பார்த்திருக்கீங்களா? இங்க பாருங்க! (பயின்றது 1979. சந்திப்பு 2015. இடம் - தேவகோட்டை)
 
 
310 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 7 shares
 
 
 
 
பெரியார் பதில்!
கடவுள் இல்லை என்கிறீர்களே! திடீரென கடவுள் வந்தால் என்ன செய்வீர்கள்?
"இருக்கிறார்" என்று சொல்வேன்.
 
452 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 47 shares
 
 
 
''மாட்டுக்கறி சாப்பிட்டால் நீ இந்து இல்லை'', என்றான் நண்பன்.
''நான் இந்து இல்லை'' என நிரூபிக்கத் தானே மாட்டுக்கறியே சாப்பிடுகிறேன்.
 
 
575 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 43 shares
 
 
 
 
பெரியார் கொள்கை என்பது தமிழர்களுக்கு உரியது! கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அவர் இதைப் பரப்பவில்லை. அம்மக்களுக்கும் இக்கொள்கைப் பெரிதாகத் தெரியாது. அதேநேரம் திராவிடக் கட்சிகள் இக்கொள்கையைப் பின்பற்றவில்லை. எனினும் பெரியார் கொள்கையே தமிழர்களை உயர்த்தும்! மற்றபடி பார்ப்பனீயத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் ஒருநாளும் தமிழர்களுக்கு உதவாது.
 
 
212 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 8 shares
 
 
 
 
மதிப்பிற்குரிய தமிழ்த் தேசிய நண்பர்களே!
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாரை 'தமிழ்' விரோதி என்கிறீர். அதே தமிழைத் 'தேவடியாள் மொழி' என்று சொன்ன பார்ப்பனர்களை எவ்வாறு அழைப்பீர்?
 
 
229 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 13 shares
 
 
 
500 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர்கள், தமிழினத்திற்குச் செய்த துரோகத்தை எடுத்துச் சொன்னீர்கள், அறிந்தோம்!
அவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு, நீங்கள் செய்த நன்மைகளையும் எடுத்துச் சொல்லுங்கள், மகிழ்வோம்!
 
170 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 4 shares
 
 
 
அவரவர்க்கேற்ற வழியை அவரவரே தேர்ந்தெடுங்கள். நேரத்தை சரியாகப் பயன்படுத்தி குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனுள்ள வழியில் செலவிடுங்கள்
Read more : http://www.periyarpinju.com/…/2594--state-of-brunei-darussa…
 
111 பேர் பேரும் இதனை விரும்புகிறீர்கள். 22 shares
 
முகநூல் பதிவுகள்!      




'மூடநம்பிக்கைகளை ஏன் ஒழிக்கச் சொல்கிறீர்கள்', எனப் பெரியாரிடம் கேட்டார்களாம்.
தமிழன் கடனாளி ஆவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாராம்.

 272 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 16 shares
 
 
 
 
20 ஆண்டுக்கு முன், திருச்சி விமான நிலையத்தைக் கடக்கும் போது, பேருந்தில் இருந்தபடியே விமானத்தை ஆர்வத்தோடு பார்ப்போம். இன்று விஞ்ஞானம் வளர்ந்து, உலகம் சுருங்கினாலும் விமானம் பார்க்கும் ஆசை குறையவில்லை. தமுஎகச கலை இரவுகளில் ஒரு பாடல் வரும்.
ஏரப்பிளான் வானத்துல பறக்குது பாரு/ ஏழைக் கனவு போல ஒசக்க போயி மறையுது பாரு/ ஏரப்பிளான் பறக்குது பார் வானத்து மேலே/ நம்மைப் பொழப்பு மட்டும் கிடக்குது பார் பூமிக்குக் கீழே/ குனிஞ்சு நாம தேடுறது வாழ்க்கையைத்தானா/ பகலில் வேலை செய்யும் போது கூட கனவுகள் தானா?
 
113 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்க வேண்டும் - அமெரிக்காவில் மோடி
ஆமா! ஆமா! நாங்கெல்லாம் மாட்டு மூத்திரம் அப்புடித்தான் குடிப்போம்.
 
 214 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 4 shares
 
 
 
பார்வையற்ற பலரும் ஊதுபத்தி விற்கிறார்கள். நமக்கு ஊதுபத்தியால் பயனில்லை எனினும், மனிதாபிமானம் கருதி வாங்குகிறோம். பார்வையற்றோர் பெரும்பாலும் ஊதுபத்தி விற்பது தற்செயல் நிகழ்வு தானா?
 
159 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 3 shares
 
 
 
விநாயகர் சதுர்த்திக்கு இந்தியாவில் 20 ஆயிரம் கோடி செலவாம். விநாயகர் சிலைகள் மட்டும் 5 ஆயிரம் கோடிக்கு விற்பனையாம்.
என்னது..? 50 கோடி இந்தியர்கள் இரவு உணவின்றி வாழ்கிறார்களா? ஏன் வாழ்றான்..? சாகச் சொல்லு!
208 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 34 shares
 
 
 
நாங்க கள்ளர் பரம்பரை! நாங்க மள்ளர் பரம்பரை! நாங்க கவுண்டர் பரம்பரை!
நாம எல்லோருமே சூத்திரப் பரம்பரை! அதற்கு முதலில் வெட்கப்படுங்கள் வீரர்களே!
 
432 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 30 shares
 
 
 
''ஒரு மனிதனுக்குக் கடவுள் பக்தியை விட, குரு பக்தி மிக முக்கியம்'' - ஸ்ரீஜெயேந்திரர் சுவாமிகள்
ஆமா! அப்படி இல்லைனா, சங்கரராமனைப் போல போட்டுத் தள்ளிடுவோம்.
 
 275 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 15 shares
 
 
 
''பன்றிக்கறி சாப்பிடப் போகிறேன்'' - ஹெச்.ராஜா
நீங்கள் இந்தியாவுக்குள் வந்த பிறகு பேசுகிற முதல் உண்மை இதுதான்! வாழ்த்துகள் ராஜா!
 
 403 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 20 shares
 
 
 
 
''மாட்டைக் கொல்பவர்கள் நரகத்திற்குப் போவார்கள்" - பாஜக எம்.பி. ஹக்முதேவ்.
மனிதனைக் கொன்றால் சொர்க்கம் போகலாம். உடனே ஆர்.எஸ்.எஸில் சேருங்கள்.
 
 
530 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.  132 shares
 
 
"மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது, மனித மலத்தை உண்ணட்டும்" - ராமகோபாலன்
2000 ஆண்டுகளாக உங்கள் உறவினர்கள் தமிழர்களின் உழைப்பையே சாப்பிடுகிறீர்கள். உங்கள் "பாஷையில்" சொன்னால் தமிழர்களின் பீயைச் சாப்பிடுகிறீர்கள்!
 
 
242 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 15 shares
 
 
 
அன்று பெண் குழந்தைகளைக் கருவிலே கொன்றார்கள். இன்று இரண்டாவது "தாயாக" மதிக்கிறார்கள்.
சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் (அக் -11)
223 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 5 shares
 
  முகநூல் பதிவுகள்!       



தொடர்வண்டிக்குத் 'தட்கல்' பயணச்சீட்டை ரூ 305 க்கு எடுத்தேன். சூழ்நிலைக் காரணமாக அதை ரத்து செய்த போது, "முழுப் பணமும் கிடைக்காது", என அறிவிப்பு வந்தது. பொதுவாக நம் பணத்தைக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மீதியைத் தரலாம். தம் மக்களின் முழுப் பணத்தையும் கொள்ளை அடிக்கும் ஒரு நாடு, எப்படி வல்லரசு நாடாக ஆக முடியும்?


 215 பேர்கள் இதை விரும்புகிறார்கள். 11 shares
 
 
 


"வேறு ஜாதியில் காதல் செய்ததால் வெட்டினேன்".
உன் ஜாதி இரத்தம் வீணாப் போகுது பாரு.. எடுத்துக் குடி.

வில்வம் கியூபா இன் புகைப்படம்.
வில்வம் கியூபா இன் புகைப்படம்.
476 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.  126 shares
 
 
 
 
 
ஒரு ஆண்டின் 365 நாளையும் கல்லெறியப் பயன்படுத்துங்கள். ஒரே நாளில் வேண்டாம்.
அல்லது எறிவதையே விட்டு விடுங்கள். கல்லைவிட, நமக்கு மனிதர்கள் முக்கியம்.
 
 352 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.     23 shares
 
 
 
 
பிராமணர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் நாம் தமிழர்களோ, ''பிராமணர்கள் இந்தியாவின் பூர்வகுடி மக்கள்'', என்கிறார்கள்.
ஏல... உங்களுக்கு எல்லாம் யாருல டியூசன் எடுக்கிறது?
 251 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.  6 shares